வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

உங்களுக்கு நடிப்பே வரல.. காஜல் அகர்வாலை அசிங்கப்படுத்திய இயக்குனர்

டோலிவுட்டின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி, தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் கொரட்டலா சிவா இருவரின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ஆச்சார்யா. இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அவரது மகன் ராம் சரண், பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் என பலர் நடித்துள்ளனர். காஜல் தன்னுடைய திருமணத்திற்கு பின் ஒப்பந்தமான இந்த படம் கொரோனாவால் பல முறை தடையாகி தற்போது வெளியீட்டிற்கு வருகிற 28ஆம் தேதி தயாராகியுள்ளது.

இந்த படத்தின் ப்ரமோஷன்களில் கலந்துக்கொண்ட சிரஞ்சீவி, ராம் சரண் இருவரும் படத்தில் நடித்துள்ள காஜலை பற்றி ஏதும் பேசாமல் இருந்தது சர்ச்சைகளை கிளப்பியது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவரை பற்றி பேசுவதை முற்றிலும் தவிர்த்து விட்டனர். படத்திலிருந்து வெளியான டிரெய்லரில் கூட காஜல் இடம்பெறவில்லை. இதனால் அவர் படத்திலுள்ளாரா? இல்லையா? என பல கேள்விகளும் சர்ச்சைகளும் எழுந்துள்ளது.

தற்போது இது குறித்து இயக்குனர் கொரட்டலா சிவா பதிலளித்துள்ளார், ‘ஆச்சார்யா’ படத்தில் காஜல் அகர்வாலின் பாத்திரத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, அவருடைய கதாபாத்திரத்தை அகற்ற முடிவு செய்தது நான் தான். ஏற்கனவே வெளியான லாஹே லாஹே பாடலில் சிரஞ்சீவியும், காஜலும் ஓரிரு காட்சிகளில் உள்ளனர். அந்த காட்சிகள் வைத்திருந்தாலும், மற்ற பகுதிகளை நீக்கிவிட முடிவு செய்துள்ளோம். காஜலுக்கும் ஆச்சார்யாவுக்கும் இடையிலான காதல் கதைக்கு பொருத்தமில்லாததாகவும், திரைக்கதையை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் அமைந்ததுள்ளதால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

முதலில் காஜலுக்கு படத்தில் சில காமெடி காட்சிகளும், காதல் காட்சிகளும் எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கதை ஓட்டத்திற்கு அவை சரியாக இல்லாததால் அவற்றை நீக்கிவிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். அதனால், காஜலுக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை நீக்குவதாகவும், மீதி பாகங்களை எடுக்கப்போவதில்லை என்றும் முன்னரே காஜலிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

காஜலுக்குத் தெரிவித்த பிறகு, குழு அவருடன் எந்தக் காட்சியையும் படமாக்கவில்லை, தெலுங்கு திரை ரசிகர்கள் மசாலா விரும்பிகள் என்பதால் ரசிகர்களை ஏமாற்றாத வகையில் ஒரு கிளாமர் சாங்கை இயக்குனர் சேர்த்துள்ளார். அந்த பாடலில் சிரஞ்சீவியுடன் ரெஜினா கசாண்ட்ரா கவர்ச்சியாக நடனமாடியிருக்கின்றார். படத்திலிருந்து காஜலின் கதாபாத்திரத்தை நீக்கி ஆச்சார்யா கதாபாத்திரத்தை ஒரு திருமணமாகாத நபராக காட்ட சிரஞ்சீவியிடமும் சம்மதமும் பெற்றுள்ளார் இயக்குனர் கொரட்டலா சிவா.

இன்றுவரை இதுபற்றி யாருக்கும் தெரியாத நிலையில், ரிலீஸ் தேதி நெருங்கிவிட்ட நிலையில், இயக்குநர் பலரிடம் உண்மையைப் பகிர்ந்து கொள்கிறார். விரைவில் ஒரு படத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக காஜல் அவரிடம் கூறியதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த படத்தை ராம்சரண் தயாரிக்க, மணிசர்மா இசையமைத்துள்ளார்.

Trending News