சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

விஜய், அஜித்தை ஓரம் கட்டும் ராம்சரணின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு.. சினிமாவை தாண்டி இத்தனை தொழில் செய்கிறாரா!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தற்போது தென்னிந்தியாவின் டாப் நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் தெலுங்கில் பல வெற்றி படங்களை கொடுத்தது மட்டுமின்றி ராஜமவுலி இயக்கத்தில் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானார்.

சமீபத்தில் இந்த படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் ராம்சரணின் மார்க்கெட் ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு வேற லெவலில் எகிறியது. கோலிவுட்டில் விஜய், அஜித்தை ஓரம் கட்டும் வகையில் ராம்சரணின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு என்ன என்பது தெரிய வந்துள்ளது.

Also Read: ராம்சரணின் பிறந்தநாளில் வெளியான RC 15 டைட்டில்.. ஆட்டத்தை ஆரம்பித்த ஷங்கர்

ஆர்ஆர்ஆர் படத்திற்கு முன்னர் வரை ராம்சரண் 35 முதல் 40 கோடி வரை தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். ஆனால் அதன் பிறகு இப்போது அவருடைய சம்பளம் 100 கோடியை தாண்டிவிட்டது. மேலும் ராம்சரண் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கியாரா அத்வானி உடன் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்நிலையில் ராம்சரணின் பிறந்தநாளான இன்று அவரை குறித்த பல தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. அதிலும் ராம்சரணின் சொத்து மதிப்பு ரூபாய் 1300 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. நடிகர் ராம்சரண் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் ஒரே மகன் என்பதால் அவரது சொத்துக்களும் அப்படியே இவருக்கே வந்து சேரும். அது மட்டுமல்ல ஹைதராபாத்தில் 25 ஆயிரம் சதுர அடி கொண்ட பிரம்மாண்டமான வீட்டில் வசித்து வருகிறார் . இந்த வீடு சுமார் 40 கோடி பெரும்.

Also Read: சர்வதேச அளவில் மார்க்கெட்டை பிடிக்க ராஜமௌலி போட்ட திட்டம்.. 83 கோடி செலவு செய்த ஷாக்கிங் ரிப்போர்ட்

மேலும் ராம் சரணுக்கு கார்களின் மீது அதீத பிரியம் உண்டு. இதனால் ஏராளமான விலையுயர்ந்த கார்களை வாங்கி குவித்துள்ளார். குறிப்பாக அவர் வைத்திருக்கும் மெர்சிடிஸ் மேபேஜ் GLS 600 காரின் விலை மட்டும் சுமார் 4 கோடி இருக்கும். மேலும் ராம்சரண் நடிப்பில் மட்டுமல்ல வியாபாரத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவராம். இவர் சொந்தமாக டுரூஜெட் என்ற விமான நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

மேலும் படங்களில் மட்டுமல்ல விளம்பரங்கள் மூலமும் பல கோடிகள் சம்பாதித்து வருகிறார். இவர் மொத்தமாக 34 பிராண்டுகளில் விளம்பர தூதராக இருந்து வருகிறார். இதனால் ஒரு விளம்பரத்திற்காக மட்டும் ராம்சரண் 2 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். அதேபோல் இவர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதன் மூலம் நல்ல லாபம் பார்த்து கொண்டிருக்கிறார்.

Also Read: வாயை பிளக்க வைக்கும் என்டிஆர் இன் சொத்து மதிப்பு.. என்னதான் இருந்தாலும் நம்ப ஹீரோ லெவலுக்கு வர முடியாது.!

மேலும் இவர் உபாசனா என்பவரை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரும் மிகப்பெரிய தொழில் அதிபரின் மகள். திருமணம் ஆகி 11 வருடங்களாக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்த இந்த தம்பதி, தற்போது தங்கள் முதல் குழந்தையை வரவேற்க தயாராகி வருகின்றனர். தற்போது உபாசனா கர்ப்பமாக இருக்கிறார். இவருக்கு இந்த ஆண்டு குழந்தை பிறக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending News