ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

போலீஸ் கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டிய விசாரணை ராம்தாஸ்.. அவர் இயக்கியத்தில் ஹிட்டான 5 படங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான விசாரணை படத்தின் மூலம் போலீஸ் அதிகாரியாக வாழ்ந்து காட்டிய நடிகரும் எழுத்தாளரும் இயக்குனருமான ஈ. ராமதாஸ், நிறைய படங்களில் குணச்சித்திர வேதங்களில் நடித்த கலக்கியவர். மேலும் ராமதாஸ் சுமார் 6 படங்களில் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்தார்.

அதன்பின் இவர் பல திரைப்படங்களில் எழுத்தாளராக பணி புரிந்தது மட்டுமல்லாமல் 5 சூப்பர் ஹிட் படங்களையும் இயக்கியவர். அதிலும் குறிப்பாக 1986 ஆம் ஆண்டு ராமதாஸ் கதை எழுதி இயக்கிய ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தில் மோகன், சீதா, கவுண்டமணி உள்ளிட்டோர் இணைந்து நடித்தனர். இந்த படம் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.

Also Read: விசாரணை பட போலீஸ் அதிகாரி திடீர் மரணம்.. காரணம் கேட்டு அதிர்ச்சியில் திரையுலகம்

அதைத்தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு ராஜா ராஜாதான் என்ற படத்தை ராமதாஸ் இயக்கினார். இதில் கதாநாயகனாக ராமராஜன் நடித்து அசத்தியிருப்பார். இவருடன் கௌதமி, செந்தில், கவுண்டமணி உள்ளிட்டோரும் இணைந்து நடித்திருப்பார்கள். அதன் பின் 1994 ஆம் ஆண்டு மன்சூர் அலிகான் நடித்த ராவணன் படத்தையும் ராமதாஸ் இயக்கினார்.

பின் 1996 ஆம் ஆண்டு வாழ்க ஜனநாயகம் என்ற படத்தை ராமதாஸ் இயக்கி மன்சூர் அலிகான் மற்றும் பிரகதி இணைந்து நடித்திருப்பார்கள். இதுமட்டுமின்றி 1999 ஆம் ஆண்டு 14 இயக்குநர்கள் இணைந்து இயக்கி கின்னஸ் சாதனை படைத்த சுயம்வரம் என்ற படத்தில் இவரும் ஒரு இயக்குனராக பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: விசாரணை பட லெவலில் சத்தமே இல்லாமல் உருவாகி வரும் படம்.. இப்பமே ஹிட் உறுதியாம்

இவ்வாறு நடிகராக மட்டுமே பரீட்சியமான ராமதாஸ் இயக்குனராகவும் 90-களில் கலக்கியவர் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. மேலும் 66 வயதான ராமதாஸ் நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

இந்த தகவலை அவருடைய மகன் கலைச்செல்வன் சோசியல் மீடியாவில் பதிவிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார். இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அவருடைய இறப்பிற்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Also Read: உண்மையான சம்பவங்களை எடுத்த தரமான 6 படங்கள்.. இந்தியாவே திரும்பி பார்த்த படங்களின் லிஸ்ட்

Trending News