ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ராம்கோபால் வர்மா இயக்கிய 5 ஆக்சன் த்ரில்லர் படங்கள்.. அதுலயும் அந்த கேங்க்ஸ்டர் படம் கண்டிப்பாக பார்க்கணும்

இந்தியாவின் மிக பிரபலமான இயக்குனராக, தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டு இருந்தவர் ராம்கோபால் வர்மா. இந்திய சினிமாவில் இவரை தெரியாதவங்க யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு சர்ச்சையான இயக்குனர் என்றே கூறலாம்.

சர்ச்சையை இருக்கும் இடத்தில்தான் திறமையும் இருக்கிறது, ஏனென்றால் இவர் வாங்காத விருதுகளை கிடையாதாம். நேஷனல் பிலிம் அவார்டு, பிலிம் பார் அவார்டு, பிலிம் பார் சௌத் அவார்டு, IIFA ஹாலிவுட் மூவி அவார்ட்ஸ் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

சில நாட்களாகவே இந்த சர்ச்சை இயக்குனர் பலான படங்களில் நடித்துவரும் நடிகைகளை வைத்து படமாக்கி வெளியிட்டு வருகிறார் அதிலும் மனுஷன் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார், அவர்களின் வாழ்க்கையும் புதுப்பிக்கும் விதமாக, சூழ்நிலை காரணமாக இது போன்ற வேலைகளுக்கு தள்ளப்படுகிறார் என்ற செண்டிமெண்ட் எல்லாம் கிடையாதாம்.

நயம் பீசா நச்சுனு இறக்கி விடுவதில் ராம்கோபால் வர்மாவை நிகரானவர் இந்திய சினிமாவில் யாரும் இல்லை என்றுதான் கூறவேண்டும். இவர் பிரம்மாண்ட படைப்பில் வெற்றி பெற்ற படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.

சிவா: ராம்கோபால் வர்மா இயக்கத்தில் நாகார்ஜுனா ,அமலா, ரகுவரன் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1989-ல் வெளிவந்த படம் சிவா. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருப்பார். தெலுங்கில் மிக பிரம்மாண்ட வெற்றி பெற்ற படமாக பார்க்கப்பட்டது. இந்த படம் கேங்ஸ்டர் படம் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அதுமட்டுமில்லாமல் பிளாக்பஸ்டர் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்தது. இந்த படம் கிட்டத்தட்ட 100 நாட்களை தாண்டி 22 தியேட்டர்களிலும் 175 நாட்களை தாண்டி 5 தியேட்டர்களிலும் ஓடி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 4 விருதுகளை தட்டிச் சென்றுள்ளார்.

சத்யா: ராம்கோபால் வர்மா இயக்கத்தில் 1998-ல் சக்கரவர்த்தி, உர்மில, மனோஜ்,சுக்ல போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது சத்யா. கிட்டத்தட்ட 2 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 18 கோடி வரை பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்தது. இந்த படம் 6 பிலிம் பார் விருதுகள், நேஷனல் பிலிம் அவார்டு இன்னும் பல விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. ராம்கோபால் வர்மாவின் சினிமா வாழ்க்கையில் இது ஒரு மைல் கல்லாக பார்க்கப்பட்டது.

கம்பெனி: மோகன்லால், அஜய் தேவன், விவேக் ஓபராய், மனிஷா கொய்ராலா போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2002-ல் வெளிவந்த படம் கம்பெனி. கிட்டத்தட்ட 70 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனையில் 250 கோடி வரை வசூல் செய்ததாம். பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற இந்த படம் பல விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளது. இதுவும் கேங்க்ஸ்டர் படமாக வெளிவந்தது மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது.

சர்க்கார்: அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், கேத்தரினா கைஃப் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2005ல் வெளிவந்த படம் சர்க்கார். ஹிந்தியில் பொலிட்டிகல் கிரைம் திரில்லர் படமாக இந்த படம் வெளிவந்தது, 1972ல் ‘தி காட் பாதர்’ என்ற படத்தின் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. 140 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனையில் 400 கோடி வரை வசூல் செய்ததாம்.

பூட்: அஜய்தேவ் கான், உர்மில,பார்டீன்,நானா படேகர் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2003ல் வெளிவந்த படம் பூட். 67 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையில் 230 கோடி வசூல் செய்தது. ராம்கோபால் வர்மா இரண்டாவது ஹாரர் மூவி தான் இந்த படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை படைத்தது.

இதே சாயலில் ராம்கோபால்வர்மா பூட் ரிட்டன்ஸ் என்று அடுத்த இரண்டாம் பாகத்தையும் வெளியிட்டார், 2012ஆம் ஆண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. ஹிந்தியில் 3d ஹாரர் மூவி ஆக வெளியிடப்பட்டது, ஆனால் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாட்டாலும் வசூலில் 60 கோடி வரை வசூல் செய்ததாம்.

ராம்கோபால் வர்மா அப்போதே கோடிகளில் வசூல் சாதனை படைத்தவர் என்பது இவர் பெற்ற வெற்றிகளின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. ஆனால் மனுஷன் தற்போது, அவரை படமெடுத்து, அவரே தனது இணையதளத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதிலும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதை நிரூபித்துவிட்டார் என்றுதான் கூறவேண்டும். இவரின் படங்களுக்கு இன்றும் ரசிகர் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு இருக்கிறது.

Trending News