புதன்கிழமை, ஜனவரி 8, 2025

ரம்யா கிருஷ்ணனை பேமஸ் ஆக்கிய ரஜினி.. உண்மையை உடைத்த KS ரவிக்குமார்

பொதுவாக இயக்குனர்கள் தங்கள் படங்களில் அறிமுகப்படுத்தும் பல புதுமையான விஷயங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அப்படி ரசிகர்கள் அனைவரும் வியந்து பார்த்த ஒரு விஷயம்தான் படையப்பா படத்தில் வரும் நீலாம்பரியின் கார்.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவாஜி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் படையப்பா. நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இந்த படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அதில் சூப்பர் ஸ்டாருக்கு இணையாக வில்லி ரோலில் மிரட்டிய அந்த நீலாம்பரி கதாபாத்திரம் இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணனின் அறிமுக காட்சியில் அவர் ஓட்டி வரும் அந்த காரை ரசிகர்களால் நிச்சயம் மறக்க முடியாது.

குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு அது பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும். அப்போது இருந்த மக்களுக்கு இரண்டு பக்கமும் இறக்கையை மேலே தூக்கியபடி இருக்கும் அந்த கார் ஒரு அதிசயமான பொருளாகவே தெரிந்தது. அதிலிருந்து அதுபோன்ற காரை எங்கு பார்த்தாலும் நீலாம்பரியின் கார் என்று சொல்லுமளவிற்கு அந்த கார் பிரபலமானது.

படத்தில் நீலாம்பரி உடன் பயணிக்கும் ஒரு முக்கிய கேரக்டராக இருந்த அந்தக் கார் உண்மையில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உடையது. அந்தக் காரை அப்பொழுதுதான் அவர் புதிதாக வாங்கியிருந்தார். இதனால் அந்த காரில் நடிகர் ரஜினிகாந்தை ஒரு ரவுண்டு அழைத்து செல்ல வேண்டும் என்று அவர் ரொம்பவும் ஆசைப்பட்டுள்ளார்.

அப்படி இருவரும் அந்த காரில் செல்லும் பொழுது ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணனின் அறிமுக காட்சியில் இந்த காரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற யோசனையை கே எஸ் ரவிக்குமாரிடம் கூறியுள்ளார். அதுவும் நல்லாத்தான் இருக்கும் என்று நினைத்த இயக்குனரும் படத்தில் அந்த காரை பயன்படுத்தினார்.

அதன் பிறகு அந்தக் கார் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக மாறியது. தற்போது பல வகையான கார்கள் நிறைய வந்திருந்தாலும் நீலாம்பரியின் அந்த காருக்கு அப்போது தனி மவுசு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News