வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மாலத்தீவில் நடக்க போகும் ரம்யா கிருஷ்ணன் மகனின் நிச்சயதார்த்தம்.. கடைசியாக விலை போன 43 வயது முத்தின கத்திரிக்கா

நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த வயதிலும் இளமையாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் அனைத்து மொழிகளிலும் நடித்து எப்பொழுதும் பிசியாக இருக்கக்கூடியவர். இவருக்கு மகனாக நடித்த ஒருவர் 42 வயது ஆன பிறகும் கல்யாணம் ஆகாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது ஒரு வழியா அவருக்கு பொண்ணு கிடைத்திருக்கிறது.

தெலுங்கு திரையுலகில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ். இவர் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானார். இவருக்கு டோலிவுட் மட்டுமில்லாமல், தமிழிலும் கோடான கோடி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர்.

பின்னர் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இவர்கள் இருவரும் ஓர், இரண்டு படங்களில் ஜோடியாக நடித்ததன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக ஒரு வதந்தி பரவி வந்தது. அதன் பிறகு இதை உறுதி செய்யும் வகையில் பாகுபலி படத்திற்குப் பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துக் கொண்டிருந்தனர்.

Also read: ஆதிபுரூஷ் படத்திற்கு ஆப்பு வச்ச அல்லு அர்ஜுன்.. 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம்

இதை தெரிந்து கொண்ட இவர்களது ரசிகர்களும் இவர்கள் கல்யாணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அது உண்மை இல்லை என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அனுஷ்கா பேட்டி ஒன்றில் பிரபாஸ் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே என்று கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்த வதந்திக்கு பிறகு இவர்கள் இருவரும் எந்த படத்திலும் சேர்ந்து நடிப்பதை விட்டு விட்டார்கள். பின்பு நீண்ட காலமாக டோலிவுட்டில் ஒரு பேச்சுலராக வலம் வந்து கொண்டிருந்த பிரபாஸ் தற்போது காதலில் சிக்கி உள்ளார். பிரபாஸ் நடிப்பில் வெளிவர இருக்கும் ஆதிபுருஷ் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சனோன் உடன் காதல் மலர்ந்து விட்டது.

Also read: படமே இன்னும் ரிலீஸ் ஆகல.. தோல்வி பயத்தில் பல கோடியில் பரிசளித்த பிரபாஸ்

இந்தப் படத்தில் பிரபாஸ் ராமராகவும் மற்றும் கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஆதிபுருஷ் படத்தில் நடிக்கும் போது தான் ஒருவருக்கொருவர் காதலை வெளிப்படுத்தி உள்ளனர். இதை தெரிந்து கொண்ட சினிமா வட்டாரத்தில் இவர் காதலியை தேடுவதற்கே 43 வயசு ஆயிருக்கு என்று கிண்டல் அடித்து வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் கல்யாணம் செய்வதற்கு இன்னும் எத்தனை வருடங்கள் ஆகப்போகுதோ என்று நக்கலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மிகப் பிரம்மாண்டமாக இவர்கள் இருவருக்கும் அடுத்த வாரம் மாலத்தீவில் நிச்சயதார்த்தம் நடக்கப்போவதாக டுவிட்டரில் அவரது நெருங்கிய நண்பர் தெரிவித்துள்ளார்.

Also read: 40 பேருடன் சூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்லும் ஸ்ருதிஹாசன் மற்றும் பிரபாஸ்.. சலார் படத்திற்கே சவால் விட்ட மர்ம நபர்கள்

Trending News