திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்து.. சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்ட டஃப் கன்டஸ்டன்ட்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்க இன்னும் சில நாட்களே உள்ளது. இதனால் இந்நிகழ்ச்சியில் கடுமையான போட்டிகள் வைக்கப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு வர தொடங்கி உள்ளனர்.

முதலாவதாக அனிதா மற்றும் ஷாரிக் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்களைத் தொடர்ந்து தாடி பாலாஜி மற்றும் அபினை இருவரும் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் வந்துள்ளனர். தற்போது இந்நிகழ்ச்சியில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் வையல்காட் என்ட்ரியாக நுழைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவருக்கு ஏராளமான ஆண் ரசிகர்கள் உண்டு. இவர் புத்தி சார்ந்த விளையாட்டுக்களாக இருந்தாலும் சரி, உடல் வலிமை சார்ந்த விளையாட்டுக்களாக இருந்தாலும் சரி இரண்டையும் திறம்பட விளையாடக் கூடியவர். இதனால் ரம்யா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் டஃப் கன்டஸ்டன்ட் ஆக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் ஒரு டாஸ்க்கில் ரம்யா பாண்டியன் மீது ஜூலி நிலை தடுமாறி விழுகிறார். இதனால் ரம்யாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாமல் போகிறது. இதனால் ரம்யா பாண்டியன் எந்த போட்டியிலும் கலந்து கொள்ள முடியும் படுத்த படுக்கையாக உள்ளார்.

மேலும், அந்த டாஸ்கில் பாலா வெற்றி பெற்றார். தற்போது ரம்யா காலில் பெரிய கட்டுடன் வீல் சேரில் வரும் புரோமோ வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். அதுவும் இறுதிப் போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ரம்யா எப்படி மற்ற போட்டிகளில் கலந்து கொள்வார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க டஃப் கன்டஸ்டன்ட் ஆக பார்க்கப்படும் ரம்யாவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று பிக்பாஸ் போட்டியாளர்கள் செய்த சூழ்ச்சி என பலரும் கூறிவருகிறார்கள். ஆனால் இந்த சம்பவம் எதர்ச்சையாக நடந்தது போல் தான் உள்ளது.

Trending News