சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

பட வாய்ப்பு இல்லாததால் விஜய் டிவியில் தஞ்சமடைந்த நடிகை.. டோட்டல் கவர்ச்சியும் வேஸ்டா போச்சே

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களில் பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் பிரபலங்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

தற்போது இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் கடந்த சீசன்களில் பங்கேற்று சினிமாவில் ஒன்றும் சாதிக்க முடியாமல் நொந்து போனவர்கள். இந்த கூட்டத்தில் அடுத்ததாக சினிமா வாய்ப்பு கிடைக்காமல் தத்தளித்த ஒரு நடிகையும் வர இருக்கிறார்.

அவர் வேறு யாரும் அல்ல சோசியல் மீடியாவை தன்னுடைய கவர்ச்சியால் கலக்கிய ரம்யா பாண்டியன் தான். இவர் பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டவர். அதில் விஷ பாட்டில் ஆக சுற்றி வந்தவர் வெளியே வந்த பிறகு ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்தார்.

அந்தப் படங்களால் அவருக்கு நல்ல பாராட்டு கிடைத்ததே ஒழிய அடுத்தடுத்த பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் ரம்யா மீண்டும் கவர்ச்சியை கையில் எடுத்தார். தன்னுடைய சோசியல் மீடியாவில் அடுத்தடுத்ததாக பல கவர்ச்சி புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

ஆனாலும் அதற்கான பலன் என்னவோ கிட்டவே இல்லை. இதனால் இவர் தற்போது தனக்கு புகழை கொடுத்த விஜய் டிவியிடமே தஞ்சம் அடைந்து விட்டார். அவர் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே சென்றுள்ளார்.

இதுகுறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த சில நாட்களாக லாஸ்லியா தான் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரம்யா பாண்டியனின் இந்த என்ட்ரி நிச்சயம் யாரும் எதிர்பாராதது தான்.

Trending News