ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பீப் வார்த்தையில் திட்டிய ராணவ்.. பத்ரகாளியாக மாறிய ஜாக்லின் சௌந்தர்யா, பிக்பாஸ் 8 இன்றைய எபிசோட்

Biggboss 8: இந்த வாரம் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது. இதுதான் பார்வையாளர்களின் கருத்து. அதிலும் இன்று காலை வெளிவந்த முதல் ப்ரோமோவிலேயே சண்டை களைகட்ட ஆரம்பித்துவிட்டது.

பொம்மை டாஸ்க் நடந்து வரும் நிலையில் ராணவ், ரயான் இருவரும் அடிதடியில் இறங்கிய ப்ரோமோ பரபரப்பை கிளப்பியது. இதை எதிர்பார்க்காத பார்வையாளர்கள் 24 மணி நேர லைவ் காட்சிகளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ராணவ் அடங்காத காளை போல் பெண்களிடம் சண்டைக்கு பாய்கிறார். அதிலும் ஜாக்லினை அவர் பீப் போடும் அளவுக்கு கெட்ட வார்த்தை சொல்லி திட்டுகிறார்.

ஓவர் ஆட்டம் போடும் ராணவ்

உடனே அவர் பதிலுக்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது சௌந்தர்யா கத்த ஆரம்பித்து விடுகிறார். ராணவ் அவரையும் கிண்டல் அடிக்கும் விதமாக வெறுப்பேத்தி பேசுகிறார். சாதாரணமாகவே ஆத்தா மலையறினால் இறங்காது.

இதில் சலங்கையை வேறு கட்டி விட்ட ராணவ் சௌந்தர்யாவை முழு சந்திரமுகியாக மாற்றி விட்டார். தலையை விரித்து போட்டு ஆக்ரோஷமாக கத்தும் சௌந்தர்யாவை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அடக்க முயற்சி செய்கின்றனர்.

ஆனாலும் அவர் எதிர்த்து சண்டை போட்டு வருகிறார். அதேபோல் ஜாக்லின் உச்சகட்ட கோபத்தில் ராணவை உன்னை அடிச்சிட்டு சாரி சொன்னா நீ கேட்பியா என வாதாடுகிறார். இப்படியாக இந்த ப்ரோமோ பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending News