செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

பிக் பாஸ் வீட்டிற்குள் லேட் ஆக வந்தாலும் நல்லா சம்பாதித்த ராணவ்.. வாய் திறமையால் மஞ்சரிக்கு அடித்த ஜாக்பாட்

Bigg Boss Tamil 8: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து ஏழு சீசன்கள் வெற்றி பெற்றதை அடுத்து எட்டாவது சீசனும் வெற்றிகரமாக முடிய போகிறது. இன்னும் இரண்டே வாரங்கள் மட்டும் இருக்கிறது. அந்த வகையில் இன்று வரை 9 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். மேலும் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால் நேற்று ராணவ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

இவரை தொடர்ந்து இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் யார் என்றால் மஞ்சரி. இவருக்கு அடுத்தபடியாக இருக்கும் போட்டியாளர் முத்துக்குமார், ஜாக்லின், தீபக், பவித்ரா, அருண், விஷால், ரயான் மற்றும் சௌந்தர்யா. ஆனால் இதில் ரயானுக்கு டைரக்டாக பைனலுக்கு போகக்கூடிய பாஸ் கிடைத்துவிட்டது.

அந்த வகையில் மீதம் இருக்கும் போட்டியாளர்களில் வருகிற வாரங்களில் விஷால் மற்றும் அருண் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு இருக்கிறது. அடுத்ததாக டாப் 6 போட்டியாளர்களில் முத்துக்குமார், ஜாக்குலின், தீபக், பவித்ரா, சௌந்தர்யா மற்றும் ரயான் இருப்பார்கள்.

மேலும் இப்போது வரை முத்துக்குமாருக்கு மக்களிடத்தில் அதிக ஓட்டுகளை பெற்று வருவதால் இவர்தான் வெற்றி கோப்பையை பெறுவார். அத்துடன் இரண்டாவது இடத்தில் ஜாக்லின் மேடை ஏறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நேற்று மற்றும் இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் போட்டியாளர்கள் வாங்கிய சம்பளம் என்னவென்று வெளிவந்திருக்கிறது.

இவர்கள் இரண்டு பேருமே பாதியில் தான் வைல்டு கார்டு போட்டியாளராக போனார்கள். அந்த வகையில் இரண்டு பேரும் கிட்டத்தட்ட 63 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் பயணித்திருக்கிறார்கள். இதில் மஞ்சரிக்கு ஒரு நாள் சம்பளமாக 18 ஆயிரம் வரை இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் மொத்த சம்பளமாக 12 லட்சத்தை பெற்றிருப்பார். வாய் திறமை இருந்தால் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக மஞ்சரி குறைந்த நாட்களில் லட்சத்தை சம்பாதித்தது மிகப்பெரிய ஜாக்பாட் ஆகத்தான் இருக்கிறது.

அடுத்ததாக பிக் பாஸ் வீட்டிற்குள் போனதிலிருந்து ராணவை மற்ற போட்டியாளர்கள் ஒதுக்கி கேலியும் கிண்டலும் செய்து தான் வந்தார்கள். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவரை நிரூபிக்கும் விதமாக ராணவ் பொறுமையாக இருந்து விளையாடினார். அந்த வகையில் மக்கள் மனதில் இவருக்கு என்று ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் 63 நாட்கள் இருந்திருக்கிறார். ஒரு நாளைக்கு இவருடைய சம்பளம் 20,000. மொத்தமாக 13 லட்சம் வரை சம்பாதித்து இருக்கிறார். லேட்டா வந்தாலும் நல்ல சம்பளத்தையும் பெற்றிருக்கிறார், மக்கள் மனசிலும் இடம் பிடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து சினிமாவில் நடிகராக வேண்டும் என்று ஆசைப்படும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று கப்பு வாங்கின போட்டியாளர்கள் அனைவருமே இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டார்கள். ஆனால் கவின், ஹரிஷ் கல்யாண், முகின் மற்றும் தர்ஷன் இவர்களெல்லாம் ஹீரோவாக அவதரித்து வருகிறார்கள். அந்த வரிசையில் ராணவ் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News