செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 31, 2024

விமர்சையாக நடைபெற்ற ஆலியா பட், ரன்பீர் கபூர் திருமணம்.. வைரலாகும் புகைப்படங்கள்

பாலிவுட் சினிமாவில் முன்னணி பிரபலங்களாக வலம் வருபவர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட். இவர்கள் இருவரும் 2018ல் இருந்த காதலித்த வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக இவர்களது திருமணம் பலமுறை தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது ஆலியா பட், ரன்பீர் கபூர் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

மும்பையில் உள்ள ரன்பீர் கபூரின் வாஸ்து இல்லத்தில் மிகுந்த பாதுகாப்புடன் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் மிக நெருக்கமானவர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே பங்கு பெற்றுள்ளனர். இதில் கரீனா கபூர், அயன் முகர்ஜி, நீது கபூர், கரிஷ்மா கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

மேலும் மிக விரைவில் இவர்களது திருமண வரவேற்பு மிகவும் பிரமாண்டமாக நடக்கவுள்ளது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் இவர்களது திருமணம் நிழாவில் 50க்கும் மேற்பட்ட உணவு கவுன்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம்.

alia bhatt ranbir kapoor
alia bhatt ranbir kapoor

அதில் இத்தாலியன், பஞ்சாபி, மெக்‌சிகன், ஆப்கான் உணவு வகைகளுடன் 25 வகையான சைவ உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏனென்றால் அலியா பட் இக்கு சைவ உணவு மீது அதீத பிரியமாம். ஆட்டம், பாட்டம், உணவு என விமர்சையாக இவர்களது திருமணம் முடிந்துள்ளது.

alia bhatt ranbir kapoor
alia bhatt ranbir kapoor

ஆலியா பட் தனது சமூக வலைத்தளங்களில் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தற்போது ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பல ரசிகர்கள் இந்த நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்துக் கூறி வருகின்றன.

alia bhatt ranbir kapoor
alia bhatt ranbir kapoor

இந்நிலையில் அண்மையில் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இணைந்து நடித்துள்ள பிரம்மாஸ்திரம் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் இந்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகும் என கூறப்படுகிறது. தற்போது இவர்களது திருமண செய்தி அவர்களது ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

Trending News