புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

3.21 மணி நேரம் பிளேடு போட்ட அனிமல் கல்லா கட்டியதா.? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Animal Movie Box Office Report: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் ஆகியோரின் நடிப்பில் உருவான அனிமல் நேற்று பிரம்மாண்டமாக வெளியானது. ஏற்கனவே இதன் டீசர், ட்ரைலர் ஆகியவை வெளிவந்து பலரையும் மிரட்டியது. அதுவே படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது.

ஆனால் நேற்று படம் வெளியான பிறகு முதல் காட்சியிலேயே கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது. இதற்கு முக்கிய காரணம் படத்தின் நீளம் தான். 3.21 மணி நேரம் ஓடிய படத்தில் பாதிக்கும் மேல் ஓவர் வன்முறை காட்சிகள் தான் நிறைந்திருந்தது.

ரத்தம் தெறிக்க தெறிக்க இருந்த இப்படம் பாலிவுட் ரசிகர்களுக்கு திருப்தியாக இருந்தாலும் சில விஷயங்கள் ரசிக்கும் வகையில் இல்லை என்பது தான் உண்மை. அதனாலேயே படம் வசூலில் தேறுமா என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால் அதை எல்லாம் அடித்து நொறுக்கும் வகையில் முதல் நாளிலேயே இப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

Also read: போதும்டா சாமி முடியல, 3.21 மணி நேரம் மூச்சி திணறவிட்ட அனிமல்.. இதுல வேற ஒரே நாள்ல 100 கோடி அள்ளி தின்னறணுமா?

அந்த வகையில் அனிமல் படத்தின் அதிகாரபூர்வமான வசூல் அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி இப்படம் 116 கோடிகளை தட்டி தூக்கி இருக்கிறது. விடுமுறை இல்லாத நாட்களில் வெளிவந்த போதிலும் இந்த அளவுக்கு அனிமல் வசூல் சாதனை படைத்திருப்பது பாலிவுட்டை கொஞ்சம் மிரள தான் விட்டிருக்கிறது.

animal-box office
animal-box office

மேலும் வார இறுதி நாட்களில் இந்த வசூல் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாகவே டாப் ஹீரோக்கள் எல்லாம் ஆக்சன் படங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் வெளிவந்துள்ள அனிமல் ஜவான் வசூலை முறியடிக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Also read: Animal Movie Review: 3.21 மணி நேரம் சூடு தாங்கியதா ரன்வீர் கபூரின் அனிமல்.? ஜவானை மிஞ்சினாரா முழு விமர்சனம்

Trending News