வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அப்பா பாசத்திற்கு ஏங்கி ரன்பீர் கபூரை மிருகமாக மாற்றிய அனிமல் ட்ரெய்லர்.. முரட்டுத்தனமா இருக்கே!

RanbirKapoor Animal Trailer: சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ஜவான், டைகர் 3 ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை அடுத்து மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கும் படம் தான் அனிமல். ஹிந்தி உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை சந்தீப் ரெட்டி இயக்கியுள்ளார்.

ரன்பீர் கபூர், அனில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்திருக்கின்றனர். டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது அதிரடியாக வெளியாகி இருக்கிறது. இதன் ஆரம்பத்திலேயே ரன்பீர் கபூர் தன் அப்பாவான அனில் கபூருடன் பேசுகிறார்.

Also read: மானாவாரியாக லிப் லாக் கொடுத்த ராஷ்மிகா.. கோடிகளை கொட்டிய அனிமல் தயாரிப்பாளர்

அந்த காட்சியே அவருக்கு அப்பா மீது எவ்வளவு அன்பும் பாசமும் இருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. அதை அடுத்து வரும் ஒவ்வொரு காட்சியிலும் இது நிரூபணம் ஆகிறது. அதுவே ஹீரோவை மிருகமாகவும் மாற்றுகிறது. அதை அடுத்து குழந்தைத்தனத்தோடு இருக்கும் ரன்பீர் கபூர் கேங்ஸ்டர் ரேஞ்சுக்கு மாறி அதிரடி காட்டுகிறார்.

இவ்வாறு சைக்கோத்தனமாக நடந்து கொள்ளும் இவருடைய மனைவியாக ராஷ்மிகா நடித்துள்ளார். ஒரு காட்சியில் நீ உன் அப்பா மேல வச்சிருக்கிறது பாசம் கிடையாது. அது ஒரு வியாதி என்று அவர் சொல்வதே படத்தின் கருவை உணர்த்துகிறது.

Also read: என்னையே உத்து பார்த்தேன் என்ன விட கெட்டவன் யாரும் இல்ல.. மிரட்டும் ரன்பீர் கபூரின் அனிமல் டீசர்

மேலும் என் அப்பாவை கொன்னவனோட முடிவு என் கையில தான் இருக்கு. நான் சாத்தானோட மோதி அதை கடிச்சு தின்னுடுவேன் போன்ற வசனங்களும் தீயாக இருக்கிறது. இப்படி ஆக்ரோஷ ஆக்சன் காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் ட்ரெய்லர் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது.

Trending News