வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அசல் யாரு போலி யாரு.? பத்த வெச்ச பிக்பாஸ், எதிரும் புதிருமான ரவீந்தர்-ரஞ்சித்

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரம் முடியப்போகிறது. இந்த வாரம் வீட்டை விட்டு யார் வெளியேறுவார் என நேற்று போட்டியாளர்கள் ஓப்பனாக சொன்ன நிலையில் வீட்டை பொருத்தவரையில் சௌந்தர்யா, ரஞ்சித் டேஞ்சர் ஜோனில் உள்ளனர்.

இவர்கள் இருவர் மீதும் போட்டியாளர்களுக்கு ஒரு அதிருப்தி இருக்கிறது. அதிலும் ரஞ்சித் செய்த பிராங்க் அவருக்கே சூனியமாக மாறிவிட்டது. அது தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவில் அப்பட்டமாக தெரிகிறது.

அதன்படி பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களில் யார் ரியல் ஆக இருக்கின்றனர் யார் போலி வேஷம் போடுகின்றனர் என டாஸ்க் வைத்தார். அதில் பெரும்பாலானோர் ரஞ்சித்தை தேர்வு செய்தது எதிர்பார்த்ததுதான்.

அதேபோல் தீபக், ரவீந்தர் இருவருக்கும் கூட சில ஓட்டுகள் விழுந்தது. இதில் தீபக் பல விஷயங்களில் நியாயமாக பேசினாலும் சில இடங்களில் அவர் ஆதிக்கம் செய்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

போட்டியாளர்களுக்குள் மூட்டிவிட்ட பிக்பாஸ்

அதுதான் தற்போது அவருக்கு கிடைத்த ஓட்டுக்கு காரணமாக இருக்கிறது. அதை அடுத்து ரஞ்சித் ரவீந்தர் போலியாக இருக்கிறார் என்று சொன்னது தான் பைனல் ட்விஸ்ட். இருவரும் அண்ணன் தம்பியாக பாசமழையை பொழிந்த நிலையில் பிராங்க் நாடகம் அதை மாற்றிவிட்டது.

இதில் ரவீந்தர் ரஞ்சித் வீட்டில் இருக்க வேண்டும் என இப்படி ஒரு நாடகம் போட்டேன் என்று சொன்னார். ஆனால் இது அவருடைய விளையாட்டு தந்திரத்தை தான் காட்டுகிறது. இவரால் முட்டாளாகி விட்டமோ என ஆண்கள் அணியே வருத்தப்பட்டனர்.

இப்படி புத்திசாலித்தனமாக முயற்சி செய்திருந்தாலும் அடுத்தடுத்த வாரங்களில் ரவீந்த பக்கம் அன்பு திரும்புவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எது எப்படியோ நாளை எலிமினேஷன் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் ஓட்டிங்கை பொறுத்த வரையில் சவுண்டு சௌந்தர்யா முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News