Ranjith: படத்தை படமாக பாருங்கள் அது வெறும் பொழுதுபோக்கு காண படம்தான் என்று எத்தனையோ பேர் வாய் கிழிய சொன்னாலும் சிலர் படத்தின் மூலம் தனக்கு ஏற்பட்ட அவமானங்களையும், அசிங்கத்தையும் சொல்லும் விதமாக கொண்டு வந்து விடுகிறார்கள். இந்த லிஸ்டில் இயக்குனர் மாரி செல்வராஜ், பா ரஞ்சித், வெற்றி மாறன் போன்ற இயக்குனர்கள் ஒடுக்கப்பட்ட ஜாதிகளையும், அவர்களுடைய குரல் அடங்கி போய் இருந்ததையும் வெளிக்காட்டும் விதமாக படங்களை எடுத்து வருகிறார்கள்.
இப்படத்திற்கு ஒரு பக்கம் வரவேற்பு கிடைத்தாலும், இன்னொரு பக்கம் எதிர்ப்பு குரல் வந்து கொண்டே இருக்கிறது. இந்த லிஸ்டில் புதுசாக நடிகர் ரஞ்சித்தும் இணைந்திருக்கிறார். அதாவது எந்த ஒரு கருத்தையும் சொல்வதற்கு முன்னால் நம் முதுகில் இருக்கும் அழுக்கை துடைத்துவிட்டு அதன் பின் கருத்துக்களை சொல்லுங்க என்று ஒரு சொலவடை உண்டு.
நீங்க பண்ணியதும் நாடக காதல் தானே சார்
அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ நடிகர் ரஞ்சித்துக்கு நன்றாகவே பொருந்தும். இவர் தற்போது இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் என்ற படத்தின் டிரைலர் வெளியானது. இந்த படத்தின் டிரைலர் பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியது. அதற்கு காரணம் இதில் குறிப்பிட்ட ஜாதியையும், கட்சித் தலைவரையும் கடுமையாக விமர்சனம் செய்து பல காட்சிகளை எடுத்திருக்கிறார். மேலும் இதில் நாடகக் காதல் என்ற சொல்லையும் பயன்படுத்திருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் ரஞ்சித் அளித்த பேட்டி ஒன்றில் நாடக காதல் என்றால் என்ன. அதை ஏன் உங்கள் கதையில் கொண்டு வருகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதில் அளித்த ரஞ்சித் சரியான காதல் என்றால் பெற்றோர்கள் நிச்சயமாக சம்மதிப்பார்கள், காதலுக்கு நான் எதிரியில்லை. பெற்றோரை எதிர்த்து செய்யும் திருமணங்களால் தான் விபரீத சம்பவங்கள் நடக்கின்றன.
பெற்றோரும் இந்த அவமானத்தால் உயிரிழந்து போகிறார்கள். மேலும் பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்யக்கூடாது என்று சட்டம் கொண்டு வரவேண்டும். அப்பொழுது நாடக காதல் முடிவுக்கு வரம் என்று சொல்லி இருக்கிறார். இதுவே என்னுடைய கவுண்டம்பாளையத்தில் கதையாகவும் இருக்கும். வாழ்க்கை தொலைத்த பெண்களின் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகவும், இன்றைய காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து எடுத்ததாகவும் இவருடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
இவர் சொன்ன இந்த நாடகக் காதலுக்கு தற்போது நெட்டிசன்கள் நல்ல பதிலடி கொடுத்து வச்சு செய்கிறார்கள். அதாவது டிசைன் டிசைனா காதல் பண்ணி திருமணம் பண்ண உங்களுக்கு என்ன இதைப்பற்றி பேச தகுதி இருக்கிறது. கொஞ்சம் உங்களுடைய கல்யாண வாழ்க்கையை திரும்பிப் பாருங்கள் என்று கலாய்த்து வருகிறார்கள்.
அந்த வகையில் 1999 ஆம் ஆண்டு நேசம் புதுசு படத்தில் நடித்த பொழுது இவருடன் ஜோடியாக நடித்த பிரியா ராமனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் ரஞ்சித், ராகசுதா என்பவரிடம் தவறான உறவுமுறை இருந்தது. பிரியா ராமனுக்கு தெரியவந்து பிரச்சனையாகியது. அடுத்து 2014 ஆம் ஆண்டு பிரியாராமன், ரஞ்சித் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.
இதில் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை பிரியாராமன் ஏற்றுக்கொண்டார். மேலும் விவாகரத்து ஆன அதே ஆண்டில் ரஞ்சித், ராக சுதாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு வருடத்தில் அந்த உறவும் முடிவுக்கு வந்தது. இப்படி டிசைன் டிசைனா திருமணம் செஞ்ச ரஞ்சித் பொதுவெளியில் அறிவுரை கூற என்ன அருகதை இருக்கிறது. அதுவும் பெண்கள் உரிமை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்று நெட்டிசன்கள் பலரும் ரஞ்சித்தை கலாய்த்து வருகிறார்கள்.