வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

விஜய் தேவரகொண்டா உடனான காதலை உறுதி செய்த நேஷனல் கிரஷ்.. முழுக்க நினைஞ்ச பிறகு முக்காடு எதுக்கு?

Rashmika Mandanna: முழுக்க நினைஞ்ச பிறகு முக்காடு எதுக்கு என்ற முடிவுக்கு வந்துவிட்டார் போல நடிகை ராஷ்மிகா மந்தனா. நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் பட விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தெலுங்கு படமாக இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது இந்த படம்.

இதற்கு காரணம் படத்தின் முதல் பாகம் தான். மேலும் மலையாள நடிகர் பகத் பாசில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதும் ஒரு காரணம். ராஷ்மிகா மந்தனா சில வருடங்களுக்கு முன்பு தென்னிந்திய சினிமா ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்டார்.

காதலை உறுதி செய்த நேஷனல் கிரஷ்

அதன் பின்னர் அவருடைய கிரிஞ் வேலைகளால் பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனத்தையும் பெற்றார். விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த கீதா கோவிந்தம் படம் தான் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது.

அத்தோடு சேர்த்து இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் வதந்திகள் வெளியாகின. ஒரு ஜோடி பிடித்து விட்டால் கண்டிப்பாக இந்த காதல் கதைகள் எல்லாம் வெளிவரும் என முதலில் கண்டு கொள்ளவில்லை. அதன் பின்னர் பல இடங்களில் இந்த ஜோடி ஆதாரத்துடன் சிக்கியது.

நேற்று புஷ்பா பட விழா நடப்பதற்கு முன்னாடி கூட ராஷ்மிகா மற்றும் விஜய் தேவர் கொண்டா டேட்டிங் போகும் போது ஒரு ஹோட்டலில் தெரியாமல் ஒரு நபர் எடுத்த போட்டோ ரெட்டிட் வலைதளத்தில் வைரலானது.

VD Rashmika
VD Rashmika

இந்த நிலையில் நேற்று புஷ்பா பட விழாவில் தொகுப்பாளர் நீங்கள் திருமணம் செய்யப் போகிறவர் சினிமா துறையை சேர்ந்தவரா அல்லது வேறு ஏதேனும் துறையை சேர்ந்தவரா இருக்கணுமா என்று கேள்வி கேட்கிறார்.

அதற்கு ராஷ்மிகா மந்தனா இந்த கேள்விக்கான பதில் எல்லோருக்கும் தெரியும் என சொல்கிறார். இதன் மூலம் விஜய் தேவரகொண்டா உடன் இருக்கும் காதலை ராஷ்மிகா உறுதி செய்ததாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Trending News