வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

படமே ஓடலன்னு காதலனுக்காக பூஜை போடும் ராஷ்மிகா.. ஹேண்ட்ஸ்ம்ன்னு நம்பி மோசம் போன தில்ராஜ்

Rashmika Mandanna: நேஷனல் கிரஷ் மற்றும் ரியாக்சன் குயின்னாக ரசிகர்களை கவர்ந்தவர் தான் ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் நடித்து பிரபலமாகிவிட்டார். அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக பாலிவுட்டில் அடி எடுத்து வைத்திருக்கிறார்.

இந்நிலையில் இவருடைய அழகுக்கும் கவர்ச்சிக்கும் மயங்கிய எத்தனையோ நடிகர்களில் இவருடைய பெயர் கிசுகிசுக்கப்பட்டது. முக்கியமாக தெலுங்கு ஹேண்ட்சம் ஹீரோவாக பார்க்கப்பட்ட விஜய் தேவர்கொண்டவுடன் அடிக்கடி ஊர் சுற்றி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இவர்களுடைய காதல் உறுதியானது என்று சொல்ல வைத்தது.

அப்படிப்பட்ட காதலனின் படம் பெயிலியர் ஆயிக்கொண்டே வருவதால் அவருக்காக கோவில் கோவிலாக சென்று பூஜை போட்டு வருகிறார் ராஷ்மிகா. அதாவது ஏப்ரல் 5ம் தேதி தெலுங்கில் தி ஃபேமிலி ஸ்டார் என்ற படம் வெளியானது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மிருணால் தாக்கூர் நடித்திருக்கிறார்.

இப்படத்தை கீதா கோவிந்தம் படத்தை எடுத்த இயக்குனர் பரசுராம் இயக்கி தில்ராஜ் தயாரித்திருக்கிறார். ஆனால் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற முடியாமல் போய்விட்டது. அந்த வகையில் கிட்டத்தட்ட 50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரிலீஸ் ஆகி ஐந்து நாள் ஆகியும் 16.50 கோடி வசூலை மட்டும் தொட்டிருக்கிறது.

காதலன் மீது அக்கறை காட்டும் ராஷ்மிகா

விஜய் தேவர்கொண்டா ஹேண்ட்ஸம் ஹீரோ மற்றும் பரசுராம் வெற்றி படத்தை கொடுப்பார் என்று இவர்களை நம்பி தில்ராஜ் பணத்தை வாரி இறைத்தார். ஆனால் கடைசியில் விஜய் தேவர்கொண்டவை நம்பினது வேஸ்ட் என்று புலம்பும் வகையில் தில்ராஜை மிகப்பெரிய கஷ்டத்தில் தள்ளிவிட்டது.

இப்படியே போனா விஜய் தேவர்கொண்டாவின் மார்க்கெட் தவிடு பொடியாகிவிடும் என்ற பயத்தில் ராஷ்மிகா கோவில் கோவிலாக சென்று அவரது பெயரில் பூஜை செய்து வருகிறாராம். இதுக்கு மேலயும் விஜய் தேவர்கொண்டாவின் படம் ஹிட் ஆகவில்லை என்றால் ராஷ்மிகா எடுக்கப் போகும் முடிவு விபரீதம் ஆகத்தான் இருக்கும் என்று டோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Trending News