வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ஆணவத்தின் உச்சத்திற்கு சென்ற ராஷ்மிகா.. அரை மணி நேரத்திற்கு அம்மணி படுத்தும் பாடு

ராஷ்மிகா மந்தனா அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் நடிகையாக உள்ளார். அதனால் இவரது படங்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராஷ்மிகா மந்தனாவும் தனது சம்பளத்தை நாளுக்கு நாள் உயர்த்தி வருகிறார். இதனால் பல தயாரிப்பாளர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ராஷ்மிகா மந்தனா கீதா கோவிந்தம் திரைப்படம் வெளியானபோது இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உருவானார்கள். அதனால் 2 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். அதன் பிறகு இவருக்கு பல படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க ஆரம்பித்தார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதனால் ராஷ்மிகா மந்தனாவின் சினிமா மார்க்கெட் உயர்ந்துள்ளது. அதாவது ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமா நடிகையாக இருந்தவர். தற்போது இந்திய சினிமா நடிகை என்ற அளவிற்கு உயர்ந்துள்ளார்.

அதனால் தற்போது தனது சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தி உள்ளார். ராம் சரண் நடிக்கும் ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் ராஷ்மிகா மந்தனா 30 நிமிடம் நடிப்பதற்கு படக்குழுவினர் கேட்டுள்ளனர். அதாவது ராம் சரணிடம் இன்டர்வியூ பண்ற மாதிரி சீன்ஸ் நடிக்க ராஷ்மிகா மந்தனா 1 கோடி சம்பளம் கேட்டு உள்ளார். இதனை கேட்ட தயாரிப்பாளர் குறுகிய நேரத்திற்கு இவ்வளவு சம்பளமா என அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பல நடிகைகள் ஒரு படத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கி வருகிறார்கள். ஆனால் குறுகிய நேரம் நடிப்பதற்கு ராஷ்மிகா மந்தனா ஒரு கோடி சம்பளம் கேட்பது அநியாயம் மேலும் கவர்ச்சியான பாடல் ,கவர்ச்சியான காட்சிகளுக்கு நடிகைகள் இவ்வளவு சம்பளம் கேட்டால் தயாரிப்பாளர்கள் கொடுத்துவிடுவார்கள்.

காரணம் இந்த மாதிரியான காட்சியில் நடிப்பதற்கு எந்த நடிகையாகஇருந்தாலும் சம்பளம் அதிகமாக தான் கேட்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். ஆனால் படத்தில் சாதாரணமாக நடிக்கக்கூடிய காட்சி கூட இவ்வளவு சம்பளம் கேட்பது அநியாயம் என படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

Trending News