Samantha-Vijay Devarakonda-Rashmika: விஜய் தேவரகொண்டா சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த குஷி நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் இருவருக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரியும், ரொமான்ஸும் இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என்னும் அளவுக்கு இருந்தது. இதனால் இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் கூட செய்திகள் வெளியானது.
இது ஒரு புறம் இருக்க சமந்தா மீது ராஷ்மிகா கடும் கோபத்தில் இருக்கிறார் என்றும் பேசப்பட்டது. ஏனென்றால் விஜய் தேவரகொண்டாவும் இவரும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். இதற்கான ஆதாரங்கள் மீடியாவில் வெளியாகி இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் அது குறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
அந்த சமயத்தில் தான் குஷி வெளியாகி இருவருக்கும் சண்டை முற்றியதாக கூட செய்திகள் பரவியது. அதுமட்டுமல்லாமல் சமந்தாவுடன் லிப் லாக் போன்ற காட்சிகளில் நடித்து அவர் ராஷ்மிகாவை வெறுப்பேற்றினார் என்றும் சலசலக்கப்பட்டது. இப்படி இவர்களின் கதை பரபரப்பை கிளப்பிய நிலையில் அதை இன்னும் ஏற்றுவது போல் இப்போது ஒரு போஸ்டர் வெளியாகி உள்ளது.
தற்போது பாலிவுட் பக்கம் அதிக கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா, ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தின் டீசர் கூட சமீபத்தில் வெளியாகி மிரட்டி இருந்தது. இந்த சூழலில் படத்தின் பாடல்களும் தற்போது வெளியாகி உள்ளது.
அதற்கான போஸ்டரை தன் சோசியல் மீடியா பக்கத்தில் ராஷ்மிகா வெளியிட்டு விஜய் தேவரகொண்டவை வெறுப்பேற்றி இருக்கிறார். ஏனென்றால் அதில் அவர் ரன்பீர் கபூருடன் லிப்லாக் செய்வது போன்று இருக்கிறது. அதேபோல் பாடலிலும் இவர்களுடைய கெமிஸ்ட்ரி கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது.
இதன் மூலம் ராஷ்மிகா தன் காதலனை பழிக்குப்பழி வாங்கி இருக்கிறார். குஷி படத்தை பிரமோஷன் செய்ய விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவரும் ஓவர் நெருக்கம் காட்டியது தான் இதற்கெல்லாம் முக்கிய காரணம். அந்த வகையில் இந்த படத்தால் இன்னும் என்னென்ன சம்பவங்கள் நடக்கப் போகிறதோ என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
பழிக்கு பழிவாங்கிய ராஷ்மிகா
