வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

மீண்டும் ஒரே இடத்தில் டேட்டிங்கில் பாய் பிரண்டுடன் ராஷ்மிகா.. Hide and Seek விளையாடும் ஜோடி

Rashmika with her boyfriend on a date at the same place again: கன்னடம், தெலுங்கு, தமிழ் என தென்னிந்தியாவை சுழற்றி அடித்த இந்த ராஷ்மிகா புயல், அனிமல் திரைப்படத்தின் மூலம் தற்போது இந்தி  திரை உலகத்தையும் தன் வசமாக்கியுள்ளது. 

தெலுங்கில் கீதகோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா ஜோடி அதில் இடம்பெற்ற பாடல் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக பேசப்பட்டது.

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தில் அறிமுகமான விஜய் தேவர கொண்டா அவர்கள், கீதகோவிந்தம், குஷி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவில் அதிகப் பெண் ரசிகர்களைக் கொண்ட பேவரைட் நடிகர் ஆனார்.

கீதகோவிந்தம் படத்தில் நடித்ததன் மூலம் கிசுகிசுக்கப்பட்ட விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஜோடி தங்கள் காதலை  வெளிப்படையாக அறிவிக்காமல் இலைமறை காயாக தனது ரசிகர்களுக்கு குறிப்பு கொடுத்து வந்தனர்.

அடிக்கடி சுற்றுலா செல்லும் இந்த ஜோடிகள் தாங்கள் எடுக்கும் புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிடுவதன் மூலம் ரசிகர்கள் இவர்களுக்குள் இருக்கும் காதலை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

ராஷ்மிகா வலைதளத்தில் பதிவிட்ட மயில் புகைப்படம்

சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் ராஸ்மிகாவின் பிறந்தநாளை ஒட்டி வெளிவந்துள்ளது.

படத்தின் காட்சிகள் பற்றி வீடியோ பதிவிட்ட விஜய் தேவரகொண்டாவின் பின்புறம் மயில் இருப்பதை ரசிகர்கள் கண்டனர்.

அதேபோன்று ராஷ்மிகா துபாயில் தனது பிறந்த நாளை 7 ஸ்டார் ஹோட்டலில் தங்கி கொண்டாடி வருகிறார்.

Rashmika shared peacock picture- at the same time vijay devarkonda with peocock video

அவரும் தனது இன்ஸ்டாவில் மயில் உடன் புகைப்படத்தை பகிர்ந்து “இந்த பியூட்டியை பார்த்தேன்” என்று  ரசிகர்களுக்கு சூசகமாக உணர்த்தியுள்ளார்.

ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் தங்களது காதலை  ரசிகர்களிடம்  வெளிப்படையாக கூறாமல் கண்ணாமூச்சி ஆடுவதாகவே தோன்றுகிறது.

ராஷ்மிகா ஒவ்வொரு முறை தனது புகைப்படங்களை வலைதளத்தில் பதிவிடும் பொழுதும் ரசிகர்கள் விஜய் தேவரகொண்டாவின் வலைதள பக்கத்தை செக் செய்து இவர்கள் காதலை உறுதிப் படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்திய திரை உலகின் முக்கிய ஸ்டாராக முன்னேறி கொண்டிருக்கும் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா உடனான கிசுகிசுக்கள் மற்றும் காதல் தனது திரை வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். 

அதே சமயம் விஜய் தேவரகொண்டாவும் தன் குடும்பத்தினரின் சம்மதத்துடன் தான் தனது திருமணம் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

காதல் உறுதியாகும் பட்சத்தில் விரைவில் இந்த ஜோடி மணவாழ்க்கையில் இணைய வாழ்த்துக்கள்.

Trending News