வெள்ளிக்கிழமை, அக்டோபர் 25, 2024

உயிர் போகும் முன் ரத்தன் டாட்டா எழுதி வைத்த உயில்.. யார் யாருக்கு சொத்தில் பங்கு, எதிர்பாராத திருப்பம்

Ratan Tata: பிரபல தொழிலதிபர் மற்றும் ரத்தன் டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாட்டா வயது மூப்பு காரணமாக அக்டோபர் 9ம் தேதி காலமானார். இவருக்கு எக்கச்சக்கமான சொத்துக்கள் இருப்பதால் இவருக்கு பிறகு அந்த சொத்துக்களை யார் பராமரிப்பார் யாரிடம் போகப் போகிறது என்று பல கேள்விகள் எழும்பியது. அந்த வகையில் இவருடைய மறைவுக்குப் பிறகு டாட்டா அறக்கட்டளையின் அடுத்த தலைவராக ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா பொறுப்பேற்று இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது ரத்தன் டாட்டா எழுதியுள்ள உயில் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது இவருக்கு தனிப்பட்ட சொத்தாக சுமார் 10,000 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இதில் மும்பையின் கொலாபாவில் உள்ள ஹலேகாய் வீடு, டாடா சன்ஸ் நிறுவனத்தில் உள்ள முதலீடுகள், எமரிடஸின் எஸ்டேட் போன்றவை அடங்கும்.

ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால் இவரின் சொத்துக்கள் யாருக்கு செல்லும் என எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது இதற்கு பதில் அளிக்கும் விதமாக எழுதி வைத்த உயில் என்னவென்றால் இவருடைய வளர்ப்பு நாய்க்கு ரத்தன் டாடா அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் ஜெர்மன் வகையை சேர்ந்த டிட்டோ என்ற ஒரு நாயை ரத்தன் டாட்டா ஆசையாக வளர்த்து வந்தார். இறப்பதற்கு கடைசி நிமிடம் வரை அவருடன் இருந்த அந்த டிட்டோவுக்கும் சொத்தில் ஒரு பங்கை எழுதி வைத்திருக்கிறார். மேலும் அந்த டிட்டோ நாயை இவருடைய சமையல்காரர் ராஜன் ஷா கவனித்துக் கொள்வார் என்று உயிலில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அத்துடன் சமையல்காரர் ராஜன் ஷா மற்றும் வீட்டுப் பணியாளர் சுப்பையா ஆகியோருக்கும் சொத்தில் பங்கு என்று உயிலில் ரத்தன் டாடா எழுதி வைத்திருக்கிறார். மேலும் இவருடைய இளம் வயது நண்பரான சாந்தனும் நாயுடுக்கு குட்ஃபெல்லோஸ் நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை ரத்தன் டாடா எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாயிருக்கிறது.

அதேபோல இவருடைய அறக்கட்டளைக்கும் சகோதரர் ஜிம்மி டாட்டா, ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா ஜெஜீபோய், வீட்டு ஊழியர்கள் மற்றும் பிறருக்கும் ரத்தன் டாடா சொத்துக்களை பங்கு போட்டு எழுதி வைத்திருக்கிறார். இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது ரத்தன் டாடாவுக்கு வளர்ப்பு நாய் என்றால் அதீத பிரியம்.

அதாவது தற்போதைய பிரிட்டிஷ் மன்னரும் அப்போதைய வேல்ஸ் இளவசரருமான சார்லஸ் 2018 ஆம் ஆண்டு, ரத்தன் டாடாவின் தொண்டு நிறுவன சேவைக்காக “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அப்பொழுது இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ரத்தன் டாட்டாவும் வருவதற்கு சம்மதம் கொடுத்திருந்தார்.

ஆனால் கிளம்பும் அந்த நேரத்தில் இவருடைய வளர்ப்பு நாய் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நிலைக்கு சென்றது. இதனால் பதறிப் போன ரத்தன் டாடா, சார்லஸ் ஏற்பாடு பண்ணின விருது வழங்கும் விழாவை ரத்து செய்துவிட்டு நாயை கவனித்தார். இதை முறைப்படி பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கும் தகவலை கொடுத்திருந்தார்.

இதனை அடுத்து விஷயத்தை கேள்விப்பட்ட சார்லஸ், ரத்தன் டாடா உடன் இருக்கும் வளர்ப்புகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக பெருமைப்படுத்தி பேசினார். அந்த அளவிற்கு பாகுபாடு இல்லாமல் மனிதாபிமானத்துடன் இருக்க போய் தான் இவருடைய மறைவுக்கு பின்னும் அனைவரும் மனதிலும் வாழ்ந்து வருகிறார்.

- Advertisement -spot_img

Trending News