Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

விஜய் டிவியில் இருந்து வெளியே வந்த ரட்சிதா.. அடிச்சான் பாரு பம்பர் பிரைஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் ரசிகர்களிடம் அதிக பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. அதைத் தொடர்ந்து அதே சேனலில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் இவர் நடித்து வந்தார். ஆனால் சில […]

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் ரசிகர்களிடம் அதிக பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. அதைத் தொடர்ந்து அதே சேனலில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் இவர் நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த சீரியலை விட்டு இவர் பாதியிலேயே வெளியேறினார்.

அதன் பிறகு வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவருக்கு தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் ரக்ஷிதா தற்போது நடித்து வருகிறார். அந்த சீரியலுக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் அவர் சோசியல் மீடியா பக்கங்களில் தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இதன் மூலம் அவருக்கு தற்போது ஒரு வெட் தொடரில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது பற்றிய தகவலை ரக்ஷிதா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார். இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ரட்சிதாவுக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பின் மூலம் மூலம் இன்னும் சில வாய்ப்புகளும் வருகிறதாம்.

இதனால் அவர் தற்போது மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். சமீபகாலமாக இவருக்கு பர்சனல் வாழ்க்கையில் ஏகப்பட்ட மன உளைச்சல்கள் இருந்து வருகிறது. நடிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் தான் அவர் அதையெல்லாம் மறந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருவதாகவும் கூறியுள்ளார்.

அந்த வகையில் அவருக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பின் மூலம் அவர் வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து வருகிறார். இதை பார்த்த அவருடைய ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.