வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

18 படங்கள் ஒரே ஹீரோவுடன் நடித்த ராதிகா.. பல ஹிட் கொடுத்தும் ஒன்றுமில்லாமல் போன ரஜினியின் நண்பர்

ராதிகா இன்று சீனியர் நடிகை. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. குடும்பத் தலைவிகளை தன் நடிப்பின் மூலம் கவர்ந்த ராதிகா இன்று சீரியலில் நம்பர்-1 நடிகையாக திகழ்ந்து வருகிறார். சீரியலில் அதிகம் சம்பளம் வாங்கக்கூடிய நடிகைகளில் ராதிகாவிற்கு தான் முதலிடம்.

ஆரம்பத்தில் பாரதிராஜாவால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நடிகருடன் கிட்டதட்ட 18 படங்கள் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அப்பொழுதே இவர்கள் இருவருக்கும் கிசுகிசுக்கள் பல வந்தன. ரஜினியுடன் சினிமாவில் ஒன்றாக அறிமுகமானவர்தான் நடிகர் சுதாகர். இவர் கிழக்கே போகும் ரயில் படத்தில் பாரதிராஜாவால் ஹீரோவாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

Also read: ரஜினியை வைத்து பல நூறு கோடி பிசினஸில் இறங்கிய லைக்கா.. குடும்பத்தில் யாரையும் விட்டு வைக்காத ரகசியம்

கிழக்கே போகும் ரயில் படம் இவருக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது, அதன்பின் பல படங்களில் ஹீரோவாக நடித்தார். நிறம் மாறாத பூக்கள், மாந்தோப்பு கிளியே இவருக்கு நல்ல ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அடுத்தடுத்து அதிரடி வெற்றிகளை கொடுத்து அசத்தி வந்தார்.

கிட்டத்தட்ட ராதிகாவுடன் மட்டுமே பதினெட்டு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார். ராதிகா , சுதாகரை தான் திருமணம் செய்வார் என்று மொத்த திரையுலகமே எதிர்பார்த்தது. ஆனால் கிட்டத்தட்ட 40 படங்களில் நடித்த சுதாகர் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டார்.

Also read: விஜய்க்கு விரித்த வலையில் சிக்கிய சூப்பர் ஸ்டார்.. மெகா கூட்டணியில் இணைந்த இளம் இயக்குனர்

அதன்பின் இவர் நாட்டம் என்னமோ தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றது. அங்கே கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அங்கே திரைத்துறையில் நல்ல நடிகராக வலம் வந்தார். இவர் 1990 ஆம் ஆண்டு ரஜினி நடித்த அதிசய பிறவி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் ரஜினி பயிற்சி பள்ளியில் படிக்கும் போது அவருடன் ஒன்றாக படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

அதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2001ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை படமும். இப்பொழுது சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது அனைவரும் அறியாத விஷயம். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனின் கணவராக சுதாகர் நடித்திருப்பார்.

Also Read : நினைச்சதை விட படு கேவலமாக செயல்படும் ராதிகா.. படிச்சவனு காட்டுவதற்காக செய்த தரங்கெட்ட செயல்

Trending News