புதன்கிழமை, ஜனவரி 1, 2025

மணியை எச்சரித்த ரவீனா ஃபேமிலி.. என்னடா இது! டிஆர்பிக்காக கலர் கலரா படம் காட்டுறீங்க

BB7 Tamil: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க பயங்கர செண்டிமெண்டாக ஃபேமிலி ரவுண்டு போய்க் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்கு போகிறவர்கள், எலிமினேஷன் ஆகும் வரை உள்ளே இருந்துவிட்டு தான் வருவார்கள் என்று தெரிந்து உள்ளே அனுப்பிய அவர்களுடைய சொந்தங்கள் உள்ளே வந்தது கட்டிப்பிடித்துக் கொண்டு அழுவது எல்லாம் ஏற்கனவே கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது.

இது போதாது என்று ரவீனா வீட்டிலிருந்து வந்தவர்கள் செய்யும் அலப்பறை போதுண்டா சாமி, ரீல் அந்து போச்சு என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது. ரவீனாவுக்கு, அப்பா இல்லை அம்மா தான் தனியாக இருந்து வளர்த்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அப்படி இருக்கும் பொழுது இத்தனை நாட்கள் கழித்து பெண்ணை பார்க்க வேண்டும் என்று அவர் உள்ளே வராமல் இருந்ததே பெரிய சந்தேகமாக இருக்கிறது.

அவருடைய நண்பரின் அம்மா என்று உள்ளே வந்தவர் அலட்டிக் கொள்வது இன்னும் சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. ஒருவேளை ரவீனா அம்மாவுக்கு இந்த அளவுக்கு நடிக்க தெரியாது என்பதால் தான் இவரை அனுப்பி இருப்பாரோ என்று எல்லாம் தோன்றுகிறது. அதாவது பிக் பாஸ் வீட்டிற்குள் மணி வருவது இவர்களுக்கு தெரியவே தெரியாதாம், அப்படி தெரிந்து இருந்தால் ரவீனாவை அனுப்பி இருக்கவே மாட்டார்களாம்.

Also Read:ரவீனாவை எச்சரித்த கோட் வேர்ட்.. தொக்கா தூக்கி வெளியில் வீசிய பிக்பாஸ்

இதுவரை நடந்த சீசன்களில் வெளியில் இருந்து உள்ளே வந்தவர்கள் கொஞ்ச நாட்கள் கழித்து காதல் கன்டென்ட் கொடுப்பார்கள். ஆனால் மணி மற்றும் ரவீனா ஏற்கனவே சோசியல் மீடியா முழுக்க காதலர்கள் என்று பச்சை குத்தப்பட்டவர்கள். மணி மற்றும் ரவீனா துபாய் வரை சென்று லூட்டி அடித்து விட்டு வந்ததெல்லாம் இணையத்தில் புகைப்படங்களாக வைரல் ஆகியது.

ஓவர் பில்டப் கொடுக்கும் ரவீனா ஃபேமிலி

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய சமயத்தில் ரவீனாவின் அம்மாவிடம் பிரபல சேனல் பேட்டி எடுத்தது. அவர் மணி உள்ளே இருப்பதால் கண்டிப்பாக என் மகளை நன்றாக பார்த்துக் கொள்வார் என்று சொல்லி இருந்தார். அப்படி இருக்கும் பொழுது திடீரென்று நண்பரின் அம்மா என சொல்லிக்கொண்டு உள்ளே வந்த கேரக்டர் பச்சை குழந்தை போல் நடிப்பது தான் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.

ரவீனாவிடம் சொல்லி மணியை கூப்பிட்டு கண்டித்தது எல்லாம் ரொம்பவும் அபத்தம். சீசன் 3 நிகழ்ச்சியில் லாஸ்ட்லியாவின் அப்பா, அடுத்த சீசனில் சிவானி நாராயணன் அம்மா இப்படித்தான் நடந்து கொண்டார்கள். அதை ஃபாலோ செய்து டி ஆர் பி ஏத்திக் கொள்ளலாம் என விஜய் டிவி நினைத்ததா என்னவென்று தெரியவில்லை. இப்படி வசமாக சிக்கினால் நெட்டிசன்கள் ஆதாரத்தை தோண்டி எடுத்து அசிங்கப்படுத்துவார்கள் என்று தெரியாமல் கலர் கலராக படம் காட்டி விட்டார்கள்.

Also Read:தனியாக உட்கார்ந்து கடலை போடவா ஷோக்கு வந்தீங்க.? ரெக்கை புடுங்கப்பட்ட பிக் பாஸ் காதல் பறவைகள்

 

Trending News