வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மணியை பிரேக் அப் செய்ய இதுதான் காரணம்.. ரவீனாவால், காதலுக்கு குட்பை சொன்ன நிஜ காதலி

BB7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் இருந்து இந்த ஏழாவது சீசன் வரை எது மாறினாலும் காதல் கண்டன்டு மட்டும் மாறுவதே கிடையாது. ஆரவ் ஓவியா தொடங்கி, மகத் யாஷிகா ஆனந்த், கவின் லாஸ்லியா, பாவனி அமீர் என இந்த பிக் பாஸ் காதல் அலை ஓய்ந்த பாடு இல்லை. தற்போது ஏழாவது சீசனில் மணி மற்றும் ரவீனா அந்த இடத்தை பிடித்திருக்கிறார்கள்.

பிக் பாஸ் வந்து காதலிப்பவர்கள் உண்மையிலேயே காதலிக்கிறார்களா அல்லது அந்த விளையாட்டில் தங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக காதலிக்கிறார்களா என்பது சந்தேகமாக தான் இருக்கிறது. ஏனென்றால் இந்த ஜோடிகள் வெளியில் வந்ததும் பிரிந்து விடுகிறார்கள். இதில் பாவணி மற்றும் அமீர் இன்றும் காதலில் இருப்பதாகவும், லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

எல்லா சீசனிலும் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு காதல் ஜோடிகள் சேருவார்கள். ஆனால் இந்த சீசனில் மணி மற்றும் ரவீனா ஏற்கனவே வெளியில் காதலித்து வந்ததாக சொல்லப்பட்டது. ஒரு பக்கம் ரவீனா நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை என்று சொன்னாலும்,மணி காதலிப்பதாகத்தான் மறைமுகமாக சொல்லி வருகிறார். இவர்கள் இருவரும் பழகும் விதம் காதல் ஜோடியே தோர்த்துவிடும் என்பது போல் இருக்கிறது.

Also Read:மரண குத்து குத்திய அர்ச்சனா.. மொத்தமாக சரண்டரான ஹவுஸ் மேட்ஸ்

நடன கலைஞரான மணி இதற்கு முன்பு விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் மணி மற்றும் ஃபெலினா ஜோடிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. அதை தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. சமூக வலைத்தளங்களில் இந்த செய்தியை அவர்கள் உறுதிப்படுத்தவும் செய்தனர்.

மணியின் பிரேக் அப்  காரணம்

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய பிறகு மணி மற்றும் ரவீனாவை பற்றி அவருடைய முன்னாள் காதலி ஃபெலினாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஃபெலினா, மணி மற்றும் ரவீனா காதலிப்பதாக சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. ரவீனா முதலில் மணியை அண்ணா என்று தான் கூப்பிட்டார். நான் அவரிடம் இது பற்றி கேட்டபோது கூட இல்லை எனக்கு அவர் அண்ணன் மாதிரி என்று தான் சொன்னார்.

ஆனால் ரவீனா எங்களுக்கு இடையில் வந்த பிறகு மணி மொத்தமாக மாறிவிட்டார். ரவீனாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து என்னை ஒதுக்குவது போல் செய்தார். இதனால் தான் ஒரு கட்டத்தில் நீ உன் கேரியரை பார்த்துக் கொள், நான் என் கேரியரை பார்த்துக் கொண்டு போகிறேன் என சொல்லி பிரேக்கப் செய்து விட்டேன் என, தங்களுடைய காதல் பிரிவுக்கு ரவீனாவை காரணமாக சொல்லி இருக்கிறார்.

Also Read:அந்தர் பல்டி அடித்த அர்ச்சனா.. வாய் அடைத்துப் போன பூர்ணிமா, வயிற்று எரிச்சலில் கத்தும் மாயா

Trending News