தயாரிப்பாளர் ரவீந்தர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். அதாவது ரவீந்தர் லிப்ரா என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார். இவர் இதன் மூலம் சில படங்களை தயாரித்து உள்ளார். ஆனால் ரவீந்தரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது வனிதா விஷயம் தான்.
அதாவது வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்ட போது இணையத்தில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. அப்போது பீட்டர் பாலின் மனைவிக்கு ஆதரவாக ரவீந்தர் தொடர்ந்து ஊடகங்களில் பேட்டி கொடுத்து வந்தார். கடைசியில் வனிதா பீட்டர் பாலை பிரிந்து விட்டார்.
Also Read :இந்த வருட தல தீபாவளி கொண்டாடும் 8 பிரபலங்கள்.. அலப்பறை செய்ய காத்து கிடக்கும் ரவீந்தர் ஜோடி
இந்த சூழலில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஏற்கனவே முதல் திருமணம் பிரிவில் முடிய இருவரும் காதலித்த தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த தீபாவளி இவர்களுக்கு தல தீபாவளி. அதை அதிகாலையே கொண்டாடி தனது சமூக வலைதள பக்கத்தில் ரவீந்தர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
புது மாப்பிள்ளையாக பட்டு வேஷ்டி சட்டையில் ரவிந்தரும், வெள்ளை நிற சுடிதாரில் மகாலட்சுமியும் போஸ் கொடுத்துள்ளனர். இந்த ஜோடிக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் ரவீந்தர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை ஊடகங்களில் விமர்சனம் செய்து வருகிறார்.
Also Read :52 வயதில் இளசுகளை கெடுக்கும் ரவீந்தர் ஜோடி.. இப்படி ஒரு செல்பி முத்தம் தேவையா!
எல்லா சீசன்களை விட இந்த சீசன் தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக சென்று கொண்டு இருப்பதால் அதிக ரசிகர்கள் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள். இதில் ரவீந்தரின் கருத்தை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்கின்றனர்.
ஏனென்றால் இவர்கள் இப்படித்தான் என்று முன்கூட்டியே யூகிக்கும் அளவிற்கு ரவீந்தரின் கணிப்பு அதிக முறை சரியாக இருந்துள்ளது. இதனால் தற்போது ரவீந்தரின் பிக் பாஸ் விமர்சனத்தை பெரும்பாலானோர் பார்த்து வருகிறார்கள்.