
தயாரிப்பாளர் ரவீந்தர் 52 வயதில் இப்பொழுது விஜே மகாலக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்தது எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால் இவர்கள் அடிக்கும் லூட்டி தான் கொஞ்சம் ஓவராக போய்க்கொண்டிருக்கிறது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இவர்களை திட்டி தீர்த்து வருகின்றனர்.
கல்யாணம் முடிந்தது, சரி போகட்டும். பொதுவெளியில் அவர்களின் அன்யோன்ய வாழ்க்கையை எல்லோருக்கும் தெரியும்படி செய்வது அருவருப்பாக இருக்கிறது என தாய்மார்கள் அனைவரும் அவர்கள் மீது பெரும் வெறுப்பை கொட்டுகின்றனர்.
Also Read: ரவீந்தர் கையில் செருப்பை கொடுத்த விஜய் டிவி.. ட்ரெண்டிங் ஜோடியை கூப்பிட்டு கேவலப்படுத்திய சம்பவம்
விஜேவாக கேரியரை தொடங்கிய மகாலட்சுமி பின்னர் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அரசி, செல்லமே, வாணி ராணி என பல சீரியல்களில் நடித்துள்ள மகாலட்சுமி தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியலில் வில்லியாக மிரட்டி வருகிறார்.
ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். இதில் ரவீந்தருக்கு 52 வயதும், மகாலட்சுமிக்கு 32 வயது ஆகிறது. 20 வயதில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வது அவர்களது உரிமை, இதை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.
Also Read: ரவீந்தர்- மகாலட்சுமியின் அநாகரீக பேட்டி.. கோபத்தில் கொந்தளித்து மன்னிப்பு கேட்கச் சொன்ன பிரபலம்
இவர்களை தொடர்பு கொள்ளும் மீடியா சேனல்களில் இவர்கள் காட்டும் நெருக்கம் அனைவரையும் எரிச்சலடையச் செய்கிறது. இவர்கள் ரொம்ப ஜாலியாக பேசுகிறேன் என்ற பெயரில் எரிச்சல் அடையும் வகையில் பேசுகிறார்கள். புதுமண தம்பதிகளை மிஞ்சும் அளவிற்கு இவர்களது லூட்டி தாங்க முடியவில்லை.

அதிலும் சமீபத்தில் இவர்கள் வெளியிட்ட முத்தக் காட்சி போட்டோ அனைத்து தாய்மார்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த போட்டோவை ஷேர் செய்த ரவீந்தர் “பூமியில் உள்ள சொர்க்கம்” என்று அதற்குத் தலைப்பு கொடுத்துள்ளது மேலும் கோபத்தை உச்சகட்டமாக்கியுள்ளது.
Also Read: சுயரூபத்தை காட்டும் ரவீந்தர்.. கல்யாணத்துக்கு பின் சுயநலமாய் மகாலட்சுமிக்கு வைத்த ஆப்பு