புதன்கிழமை, ஜனவரி 15, 2025

காதல் மனைவியாலே மாட்டிய ரவீந்தர்.. பொறிவைத்து பிடித்த சம்பவம்

Ravindar: தயாரிப்பாளரான ரவீந்தர் கடந்த வருடம் சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடும் அதிர்வலையை ஏற்படுத்திய அந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த ஜோடி போட்டோஷூட் நடத்துவது, ஹனிமூன் என சோசியல் மீடியாவில் ஓவர் அலப்பறை செய்து வந்தனர்.

அதை அடுத்து சமீபத்தில் தான் இவர்கள் தங்களுடைய முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடினார்கள். அப்போது ரவீந்தர் தங்கள் திருமணம் பற்றி வந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் என் மனைவி இறைவன் கொடுத்த வரம் என்று ஒரு பதிவையும் போட்டிருந்தார்.

Also read: மகாலட்சுமியுடன் விவாகரத்தா விளக்கி கூறிய ரவீந்தர்.. 90ஸ் கிட்ஸ் சாபம் உங்கள சும்மா விடாது

ஆனால் அது நடந்த சில நாட்களிலேயே அவர் பண மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார். அதுவும் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று கூறி பாலாஜி என்பவரிடம் கிட்டத்தட்ட 16 கோடி வரை பணத்தை வாங்கி ஏமாற்றி இருக்கிறார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இவருடைய கைது எப்படி நடந்தது என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ரவீந்தரை கைது செய்ய தேடி வந்திருக்கின்றனர். அப்போது அவர் தன் காதல் மனைவியை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

Also read: நாக்கு மேல பல்ல போட்டு பேசுன ஊரு.. திருமண நாளில் பதிலடி கொடுத்த ரவீந்தர்-மகாலட்சுமி ஜோடியின் புகைப்படம்

அதைத்தொடர்ந்து அசோக் நகரில் இருக்கும் அலுவலகத்திற்கு ரவிந்தர் வந்திருக்கிறார். இதற்காகவே காத்திருந்த காவல்துறையும் பொறிவைத்து பிடித்தது போல் சரியான நேரத்தில் அவரை ஸ்கெட்ச் போட்டு வளைத்து இருக்கின்றனர். இப்படித்தான் அவருடைய கைது நடந்து இருக்கிறது.

அந்த வகையில் தன்னுடைய மனைவியாலேயே ரவீந்தர் போலீசில் சிக்கி இருக்கிறார். தற்போது அவரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வால் மகாலட்சுமி தீவிர மன உளைச்சலில் இருப்பதாகவும் சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Also read: முதல் திருமண நாளை கொண்டாடிய கையோடு நடந்த கைது.. 16 கோடி மோசடி செய்த மகாலட்சுமி கணவர்

Trending News