Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் இது. டாப் 6 போட்டியாளர்களில் யார் வின்னர் என்பதை தெரிந்து கொள்ளும் நாளும் நெருக்கத்தில் வந்துவிட்டது.
முத்து தான் ஜெயிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த ஆடியன்ஸின் எண்ணம். அதேசமயம் மற்ற போட்டியாளர்களின் ஆதரவாளர்களும் தீயாக ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமான விதிமுறைகளை பிக் பாஸ் கொடுத்துள்ளார்.
பணப்பெட்டி வெளியில் வைக்கப்பட்டிருக்கும். அதை எடுக்க விரும்புபவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்துக்கொண்டு மீண்டும் வீட்டிற்குள் வரவேண்டும்.
துணிந்து இறங்கிய ரயான்
அப்படி வந்து விட்டால் போட்டியையும் தொடரலாம் பணமும் உங்களுக்கு தான். இல்லை என்றால் போட்டியை விட்டு வெளியேற வேண்டும் என்பது விதிமுறை.
அதை அடுத்து ஐம்பதாயிரம் பணப்பெட்டி வைக்கப்பட்டது. அதில் துணிந்து இறங்கிய முத்து புயல் போல் செயல்பட்டு மீண்டும் வீட்டுக்குள் வந்தார்.
அதைத்தொடர்ந்து இரண்டு லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சவாலை ஏற்றுள்ள ரயான் 45 மீட்டர் தூரத்தை கடந்து பெட்டியை எடுத்துக் கொண்டு மீண்டும் திரும்பி விட்டார்.
இதற்கான ப்ரோமோ பரபரப்பாக வெளியேறியுள்ளது. ஆனால் லைவ் நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெற்றதை பார்த்து ஆடியன்ஸ் பாராட்டி வருகின்றனர்.
இனி அடுத்தடுத்து யார் களமிறங்க போகிறார்கள் என்பதும் சுவாரஸ்யம் தான். அதில் பெண்கள் நிச்சயம் தங்கள் திறமையை காட்டுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.