புதன்கிழமை, ஜனவரி 15, 2025

18 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் ரியல் ஜோடி.. கெமிஸ்ட்ரியில் பின்னும் ஜோதிகா

Jothika: ஜோதிகா ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த பொழுது ரசிகர்களை கவரும் வகையில் துரு துருவென்று இருக்கும் நடிகையாக பார்க்கப்பட்டார். அதன் பின் சூர்யாவை காதலித்து கல்யாணம் பண்ணி இரண்டு குழந்தைக்கு தாயாகி பொறுப்பான குடும்பப் பெண்மணி ஆக மாறிவிட்டார்.

அடுத்து மீண்டும் சினிமாவிற்குள் நுழைந்து பெண்கள் சம்பந்தப்பட்ட படங்களிலும், குடும்ப ரீதியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து அவ்வப்போது ஜிம்மில் ஒர்க் அவுட் பண்ணி உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் போட்டோ வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் தொடர்ந்து இவருக்கு படம் வாய்ப்புகள் குவிந்து கொண்டே வந்தது. அந்த வகையில் கடந்த வருடம் மலையாளத்தில் காதல் தீ கோர் என்ற படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்தார். அத்துடன் இந்த ஆண்டு பாலிவுட்டில் திரில்லர் படமாக சைத்தான் படத்திலும் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் இரண்டு படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டு வருகிறார்.

கணவருடன் ஜோடி சேர போகும் ஜோ

அடுத்ததாக இங்கே மறுபடியும் களமிறங்க போகிறார். அந்த வகையில் இவருடன் ஜோடி சேரப் போவது இவருடைய ரியல் கணவர் சூர்யா தான். இவர்கள் இருவரும் சேர்ந்து கடைசியாக 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்திருக்கிறார்கள். அதன்பின் இருவரும் அதே ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி கல்யாணம் செய்து கொண்டார்கள்.

இதனை அடுத்து 18 வருடங்களுக்குப் பின் மறுபடியும் இவர்கள் இருவரும் சேர்ந்து ஜோடி சேரப் போகிறார்கள். இவர்கள் இருவரையும் வைத்து இயக்கப் போவது இரண்டு இயக்குனர்கள்.

அவர்கள் யார் என்றால் பெங்களூர் டேஸ் படத்தை எடுத்த அஞ்சலி மேனன் மற்றும் சில்லு கருப்பட்டி படத்தை எடுத்த ஹலிதா ஷமீம். இவர்கள் இருவரும் சேர்ந்து சூர்யா மற்றும் ஜோதிகாவை வைத்து ஒரு தரமான சம்பவத்தை செய்யப் போகிறார்கள்.

சும்மாவே இவர்கள் இருவருடைய கெமிஸ்ட்ரி ரசிக்கும் படியாக இருக்கும். அந்த வகையில் பல வருடங்களுக்குப் பின் மறுபடியும் இணையும் இவர்களுடைய ரொமான்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரி பற்றி சொல்லவே தேவையில்லை. கண்டிப்பாக இந்த ஒரு விஷயம் இவர்களின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையப் போகிறது.

Trending News