சிங்கப்பெண்ணே -ஆனந்தியின் நிஜ காதலர் இவர் தானா.? அட! கூட நடிச்ச ஹீரோவையே கரெக்ட் பண்ணீட்டாங்களே!

Singapenne: சிங்க பெண்ணே சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் தான் ஆனந்தி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் மனிஷா மகேஷ்.

கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து பல துணிச்சலான விஷயங்களை செய்யும் தைரியமான பெண்ணாக இந்த சீரியலில் வருவார்.

மேலும் இந்த சீரியலில் அன்பு மற்றும் ஆனந்தியின் கெமிஸ்ட்ரி தான் ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்க காரணம்.

ஆனந்தியின் நிஜ காதலர் இவர் தானா?

மனிஷா கேரளாவை சேர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். இவர் முதன் முதலில் பாடாத பைங்கிளி எனும் மலையாள சீரியல் மூலம் தான் சின்னத்திரை ஹீரோயின் ஆனார்.

இப்போது சிங்க பெண்ணே சீரியல் அவருக்கு எந்த அளவுக்கு பேர் வாங்கி கொடுத்தது அதே அளவுக்கு பாடாத பைங்கிளி சீரியலிலும் வரவேற்பை பெற்றார்.

இந்த சீரியலில் அவருடைய பெயர் கண்மணி. இந்த கண்மணி கேரக்டருக்கு ஜோடியாக தேவா என்னும் கேரக்டர் இருந்தது. இந்த கேரக்டரில் ஒரு சில குளறுபடிகளால் நான்கு பேர் நடித்திருந்தார்கள்.

இதில் முதன் முதலில் நடித்தவர் தான் சூரஜ் சன். இவரும் ஆனந்தியும் தான் காதலித்துக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Manisha-Sooraj
Manisha-Sooraj

கொரோனாவுக்கு முற்பட்ட காலத்தில் சூரஜ் இந்த சீரியலில் இருந்து சில சர்ச்சை காரணங்களால் விலகிக் கொண்டார். தற்போது சூரஜ் மற்றும் மனிஷா காதலித்துக் கொண்டிருப்பது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →