வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

என்ன ரொம்ப அவமரியாதை பண்றாங்க.. விஜய் படங்களை நிராகரிக்க ஜோதிகா கூறிய அதிர்ச்சி காரணம்

Jyotika Rejects Vijay Movies: திருமணத்திற்கு பிறகு கம்பேக் கொடுத்த கதாநாயகிகளில் பெரிய வெற்றியைப் பெற்றவர் நடிகை ஜோதிகா தான். இதற்கு முக்கிய காரணம் பொதுவாக கம்பேக் கொடுக்கும் ஹீரோயின்கள் பட வாய்ப்புகளுக்காக கொடுத்த கேரக்டரில் நடித்துவிட்டு போகலாம் என்று முடிவெடுத்து விடுவார்கள். ஆனால் ஜோதிகா நான் இப்படித்தான் இந்த மாதிரி கேரக்டரில் தான் நான் நடிப்பேன் என்று உறுதியாக நின்றதால் இப்போது ஜொலித்துக் கொண்டு இருக்கிறார்.

ஜோதிகா எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் 36 வயதினிலே என்னும் படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் இதுவரை முன்னணி ஹீரோக்களுக்கு ஒப்புக்கு சப்பானான கதாநாயகியாக நடிக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் சூர்யா படங்களில் கூட தலைகாட்டி விட்டு போயிருக்கலாம். ஆனால் தன்னுடைய தனித்துவத்தை இழக்காமல் இருந்ததால் தான் இன்று மலையாள சினிமாவில் மம்முட்டிக்கு கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

சமீபத்தில் மம்மூட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த காதல் தி கோர் என்னும் படம் ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது அதன் பின்னர் ஜோதிகா ஒரு பேட்டியில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் ஜோதிகா, இரண்டு சீனுக்கு வரும் கேரக்டர் என்றாலும் எனக்கு முக்கியத்துவம் இருந்தால் தான் நான் அந்த படங்களில் நடிப்பேன் என்று சொல்லி இருக்கிறார்.

Also Read:இருளருக்கு சூர்யா பணம் கொடுத்ததாக சொன்னது வடிகட்டின பொய்.. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை

25 வருடங்களாக நான் சினிமாவில் இருக்கிறேன், நிறைய நல்ல கேரக்டர்கள் பண்ணியிருக்கிறேன். ஆனால் என்னிடம் சில இயக்குனர்கள் இந்த படத்தில் இரண்டு, மூன்று காட்சிகளுக்கு மட்டும் வந்து நடித்துக் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். ஹீரோவின் பக்கத்தில் சும்மா வந்து நிற்க எனக்கு பிடிக்கவில்லை. இயக்குனர்கள் இப்படி வந்து என்னிடம் கேட்பது என்னை அவமரியாதை பண்ணுவது போல் இருக்கிறது.

என்ன அவ மரியாதை பண்றாங்க

நல்ல கேரக்டர்களை தேர்ந்தெடுத்த நடித்துக் கொண்டிருக்கும் என்னிடம் எப்படி இது போன்ற ஒரு கதையை எடுத்துக்கொண்டு இயக்குனர்கள் வருகிறார்கள் என ஆதங்கப்பட்டு இருக்கிறார். ஜோதிகா சொன்ன இந்த விஷயம், நடிகர் விஜய்க்கு பதிலடி கொடுத்தது போல் இருக்கிறது. ஏனென்றால் விஜய்யின் மெர்சல் மற்றும் தளபதி 68 படத்திற்காகத்தான் ஜோதிகாவை அணுகினார்கள்.

மெர்சல் படத்தில் முதலில் நித்யா மேனன் கேரக்டருக்கு ஜோதிகா நடிக்க இருந்ததாக சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிறகு ஜோதிகா சொல்லாமல் கொள்ளாமல் சூட்டிங் ஸ்பாட்டை விட்டு கிளம்பியதாக கூட செய்திகள் வெளியாகின. அதனை தொடர்ந்து தளபதி 68 படத்தில் ஜோதிகா நடிக்க இருக்கிறார் என உறுதியான பின்பு, அவர் நடிக்கவில்லை என்று செய்திகள் வெளியானது.

Also Read:புயலால் தத்தளிக்கும் சென்னை, டாப் ஹீரோக்கள் சூர்யா, கார்த்திக்கை பார்த்து கத்துக்கோங்க!

Trending News