சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா திடீர் திருமணத்திற்கு இதான் காரணம்.. பரபரப்பை கிளப்பிய பயில்வான்

Reason behind redinkingsley-sangeetha marriage:  46 வயதில் முரட்டு சிங்கிளாக சுற்றிக்கொண்டு இருந்த காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி, நேற்று அவசர அவசரமாக சீரியல் நடிகை சங்கீதாவை மைசூரில் மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திடீர் திருமணத்திற்கு என்ன காரணம் என்பதை பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டியில் போட்டுடைத்து பெரும் பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறார்.

ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா ஜோடி பல வருடங்களாகவே காதலித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதை ரொம்பவே சீக்ரெட் ஆக வைத்துள்ளனர். விரைவில் திருமணம் செய்து கொள்வதாக நினைத்தாலும், அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

இதனால் டென்ஷனான சங்கீதா, ‘எத்தனை நாள் தான் திருமணத்தை தள்ளிப் போடுவீர்கள்’ என கோபமாக சண்டை போட்டு, ரெடின் கிங்ஸ்லியை அவசர திருமணத்திற்கு ஒத்துக்க வைத்திருக்கிறார். அது மட்டுமல்ல பெரிய அளவில் திருமணம் செய்தால் பிரபலங்கள் பலரையும் அழைக்க நேரிடும், இதனால் செலவும் தாறுமாறாக எகிறும் என்பதால் மிக எளிமையாகவே இந்த ஜோடி திருமணத்தை முடித்து விட்டனர்.

Also Read: காமெடி டிராக்கை ஓட்டி வந்த ரஜினியின் 5 படங்கள்.. ரெண்டு பொண்டாட்டி இடம் மாட்டி தவித்த வீரா

ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா திடீர் திருமணத்திற்கு காரணம்

இப்போது ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார். ரெடின் கிங்ஸ்லியை பொருத்தவரை சங்கீதாவை இப்போது திருமணம் செய்து கொள்ள ஐடியா இல்லையாம். ஆனால் சங்கீதா கொடுத்த நெருக்கடியால் தான் இந்த அவசரத் திருமணம் நடந்திருக்கிறது. இன்னமும் காலம் தள்ளிப் போச்சுன்னா, ரெடின் கிங்ஸ்லி 60ம் கல்யாணம் தான் செய்யணும்.

எப்படியோ உஷாரா சங்கீதா, சீரியலில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் வில்லியாக மாறி ரெடின் கிங்ஸ்லியின் முடிவை மாற்றிவிட்டார். இனி இவர் சங்கீதாவின் கைக்குள் தான் அடங்கி இருக்கணும். இருந்தாலும் இந்த க்யூட் ஜோடி வயது வித்தியாசம், உயரம் இதையெல்லாம் தாண்டி திரையுலகில் நட்சத்திர தம்பதியர்களாக எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசை.

Also Read: ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா வைரலாகும் புகைப்படங்கள்.. வயது வித்தியாசம் எல்லாம் ஒரு மேட்டர் இல்ல ப்ரோ, செம ஜோடி

Trending News