ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

உங்க பாட்டு சரியில்ல என கூறிய சங்கர்.. உன்னோட இந்த படமே தேவை இல்ல என தூக்கி எறிந்த வாலி

கவிஞர் வாலி எம்ஜிஆர் தொடங்கி இன்றைய தலைமுறையான நடிகர் தனுஷின் படம் வரைக்கும் பாடல்கள் எழுதி இருக்கிறார். வாலி எப்போதுமே அந்தந்த காலத்திற்கு ஏற்றவாறு தன்னுடைய சிந்தனைகளை இளமையாக மாற்றிக் கொள்வார். அதனால் தான் இவரை வாலிப கவிஞர் வாலி என்று சொல்வார்கள். வாலிக்கு எந்த அளவுக்கு திறமை இருக்கிறதோ அதே அளவுக்கு சுயமரியாதை மற்றும் கோபமும் அதிகம் வரும்.

அப்படி வாலியின் கோபத்தில் சிக்கியவர் தான் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர். இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்த இவர் முதன் முதலில் இயக்கிய திரைப்படம்தான் ஜென்டில்மேன். இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. படத்திற்கு இசையமைத்தவர் இசை புயல் ஏ ஆர் ரகுமான். ரகுமானுக்கு அதுதான் மூன்றாவது படம். படத்திற்கு எல்லா பாட்டையும் எழுதிக் கொடுக்க கவிஞர் வாலி ஒப்பந்தமானார்.

Also Read:ஷங்கரின் 1000 கோடி பட்ஜெட் படமான வேள்பாரியின் மொத்த கதை இதுதான்.. துரோகத்தால் வீழ்த்தப்பட்ட வரலாறு

அனைத்து பாடல்களையும் எழுதிக் கொடுக்க ஒப்பந்தமான கவிஞர் வாலி இயக்குனர் சங்கர் தெரியாமல் செய்த ஒரு சிறிய தவறினால் ஒரே பாட்டோடு படத்தை விட்டு விலகி விட்டார். வாலி மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கும் சங்கரால் எவ்வளவு பேசியும் வாலியை மீண்டும் படத்திற்குள் கொண்டு வர முடியவில்லை. அதன் பின்னர் இணைந்தவர் தான் கவிஞர் வைரமுத்து.

கவிஞர் வாலி இந்த படத்திற்கு முதன் முதலில் எழுதிய பாடல் ‘ சிக்கு புக்கு ரயிலே’. இந்த பாடல் அப்போது மிகப்பெரிய ஹிட் அடித்தது. பாடலின் முதல் இரண்டு வரிகள் இன்றைய புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாசால் பாடப்பட்டிருக்கும். முதலில் வாலி இந்த பாட்டை எழுதிக் கொடுக்கும் பொழுது சங்கருக்கு அதில் திருப்தி இல்லையாம் . சிக்கு புக்கு ரயிலே என்பது என்னவோ தனக்கு பிடிக்காதது போல் இருந்ததால், அதே மெட்டில் வேறு வரிகளை கேட்டிருக்கிறார்.

Also Read:லோகேஷ்க்கு போட்டியாக 4 மல்டி ஸ்டார்களுடன் களமிறங்கும் ஷங்கர்.. பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் வேள்பாரி

வாலி அப்பொழுதே இந்த பாடல் செம ஹிட் ஆகும் என்று சொல்லி இருக்கிறார். இருந்தாலும் சங்கர் ஒத்துக் கொள்ளாததால் வேறு வரிகளை எழுதிக் கொடுத்திருக்கிறார். ஆனால் பாடல்கள் பதிவான பிறகு சிக்கு புக்கு ரயிலே என்னும் வரிகள் கொண்ட பாடலை தான் ஓகே செய்து இருக்கிறார் சங்கர். இது கவிஞர் வாலிக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் இந்த படத்தில் நான் இனிமேல் வேலை செய்ய மாட்டேன் என்று சொல்லி விலகி விட்டாராம் .

அதன் பின்னர் ஜென்டில்மேன் படத்தில் ஒப்பந்தமானவர்தான் கவிஞர் வைரமுத்து. அவருடைய வரிகளில் ஒட்டகத்தை கட்டிக்கோ, என் வீட்டுத் தோட்டத்தில், உசிலம்பட்டி பெண்குட்டி பாடல்கள் செம ஹிட் அடித்தது. இந்த படத்திற்கு பிறகு சங்கர் பலமுறை வாலியிடம் பேசிப் பார்த்து இருக்கிறார். அதன் பின்னர் ஒரு கட்டத்தில் வாலி சமாதானமாகி மீண்டும் சங்கருடன் பணிபுரிந்து இருக்கிறார்.

Also Read:பிரம்மாண்ட நாவலை படமாக்கும் ஷங்கர்.. சூர்யாவை விட பாலிவுட் ஹீரோவுக்கு முன்னுரிமையா?

Trending News