அஸ்வின் இந்திய அணிக்கு சிறப்பாக செயல்பட்டதில் முக்கியமான பங்கு வகிக்கும் நட்சத்திர வீரர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அணில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், வரிசையில் அடுத்த வீரர் அஸ்வின் தான். 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள அஸ்வின் திடீரென அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அதிர்ச்சி முடிவை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 14 முறை 50 ரண்களும், 6 முறை நூறு ரண்களும் அடித்து அசத்தியுள்ளார் அஸ்வின். அதிகபட்ச ஸ்கோர் ஆக 124 ரன்கள் அடித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் முக்கிய பங்கு வகித்தார்.
பௌலிங் செய்ததில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 37 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியில் எட்டு முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியும் சாதனை படைத்துள்ளார். இப்பேற்பட்ட ஆல்ரவுண்டர் ஓய்வு முடிவை அறிவித்தது இந்திய அணிக்கு பெரிய இழப்புதான்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் தொடரில் ஜடேஜா மட்டும் விளையாடி வருகிறார். அஸ்வினுக்கு இந்த தொடரில் இடம் கிடைக்காதது தான் இந்த ஓய்வு முடிவுக்கு காரணமா என்று தெரியவில்லை. தொடர்ச்சியாக அஸ்வினுக்கு வாய்ப்பளிக்காமல் இருந்ததால் இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டாரா என்பதும் கூட தெரியவில்லை.
38 வயதாகும் அஸ்வின் சென்னை அசோக் நகரில் வசித்து வருகிறார். எம்ஆர்எப் போல் கிரிக்கெட் கிளப் ஒன்றை ஆரம்பித்து இளைஞர்களை இந்திய அணிக்காக தயார்படுத்துவதுதான் அவரது நீண்ட நாள் ஆசை. இப்பொழுது அதை நோக்கி பயணிக்க உள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.