வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிரியாணி விருந்தில் வந்த தீராத பகை.. 14 வருடமாக ஜெயலலிதா, விஜய்யை வெறுத்து ஒதுக்கிய ரகசியம்

ஜெயலலிதா எப்பொழுதுமே இளைய தளபதி விஜய்யை ஒரு எதிரியாகவே பார்த்து வந்தார். அவர் படங்களுக்கு பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வந்தார். அப்படி எதிர்ப்பு காட்டுவதன் ரகசியம் இப்பொழுது பல வருடங்களுக்கு பின் தெரியவந்துள்ளது

இவர்களுக்குள் 2022 ஆம் ஆண்டிலிருந்தே பிரச்சனையும், பணி போரும் தொடங்கியிருக்கிறது. அப்பொழுதுதான் விஜய் வளர்ந்து வரும் காலம். அவரது தந்தை, அவரை வேறு ஒரு பரிமாணத்தில் உருவாக்கிக் கொண்டிருந்தார். அவரின் செயல்கள் அனைத்துமே விஜய்யை தமிழ்நாட்டில் ஒரு பெரிய அசைக்க முடியாத தூணாய் உருவாக்குவதுதான்.

Also read: எம்ஜிஆருக்காக பாலச்சந்தரை பகைத்துக் கொண்ட நாகேஷ்.. பூதாகரமாக வெடித்த சண்டை

இப்படி அசுரத்தனமாய் வளர்ந்து கொண்டிருக்கும் விஜய்யை, செல்வி ஜெயலலிதா அவர்கள் வெறுக்க  காரணமாய் அமைந்தது ஒரு பிரியாணி விருந்துதானாம். அவரது தந்தையால் கொடுக்கப்பட்ட அந்த விருந்து பெரும் சர்ச்சையில் வந்து முடிந்தது. ஒருமுறை சென்ட்ரல் ஜெயிலில் உள்ள சிறைக் கைதிகள் அனைவரும் மட்டன் பிரியாணி விருந்து கேட்டுள்ளனர். அப்பொழுது போலீஸ் துறையில் உயர் அதிகாரியாக இருந்த ஜி இராமச்சந்திரனிடம் அவர்களது ஆசையை முன்வைத்துள்ளனர்.

சிறையில் உள்ள மொத்த கைதிகள் 2000 பேருக்கு மட்டன் பிரியாணி கொடுப்பது என்பது இயலாத காரியம். இதனால் அப்பொழுது காவல் அதிகாரி, ஜி ராமச்சந்திரன் அவர்கள் விஜய்யின் தந்தையாகிய எஸ் ஏ சந்திரசேகரிடம் இதை முறையிட்டு உதவி கேட்டிருக்கிறார்.

Also Read : அடுத்த 500 கோடி பட்ஜெட் படத்தை உறுதி செய்த ராஜமவுலி.. கதை எழுதுவது யார்னு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

இதனை கேட்டு எஸ் ஏ சந்திரசேகரும் அவர்களும், கைதிகளுக்கு விருந்து கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டார். அந்த விருந்து தினத்தில் கைதிகளுக்கு சந்திரசேகரம் ,அவரின் மகனான இளையதளபதி விஜய்யும் ஜெயிலில் சென்று பிரியாணி பரிமாறியுள்ளனர்.

அப்பொழுது மேடையில் பேசிய போலீஸ் உயர் அதிகாரி ஜி ராமச்சந்திரன், விஜய்யின் குணங்களை பார்த்தால் அப்படியே அவர் எம்ஜிஆர் போல் இருக்கிறார், அவரிடம் புரட்சித்தலைவர் பண்பு அப்படியே இருக்கிறது என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டார். இது அடுத்த நாள் எல்லா பத்திரிகையிலும் தலைப்பு செய்தியாக வந்து விட்டது. இதனைக் கண்டு உச்சகட்ட கான்டாகினார் செல்வி ஜெயலலிதா. அப்பொழுது பொறுப்பில் இருந்த அவர் அந்த அதிகாரியை டிரான்ஸ்பர் என்ற முறையில் தண்டித்தார். அதிலிருந்து ஜெயலலிதாவிற்கு விஜய்யை பிடிப்பது இல்லை.

Also Read : கெட்டப் சேஞ்ச் பண்ணாத விஜய்.. ஒரே மாதிரி நடிக்க இதுதான் காரணம்

Trending News