வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சமீபத்தில் சந்தானம் ரசிகர்களை நோகடித்த 5 படங்கள்.. தியேட்டரில் தலைதெறிக்க ஓட வைத்த குலுகுலு

சந்தானம் காமெடி நடிகராக இருந்த வரையில் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. இவரது படங்களில் சில சமயங்களில் ஹீரோவை விட இவருக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று தனது பெயரை சந்தானம் கெடுத்துக் கொண்டார். அந்த வகையில் ரசிகர்களை நோகடித்த சந்தானத்தின் 5 படங்களை பார்க்கலாம்.

டகால்டி : விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், ரித்திகா சென், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் டகால்டி. இந்த படத்தில் குரு என்ற கேரக்டரில் சந்தானம் நடித்திருந்தார். இந்த படம் படுமோசமான தோல்வியை சந்தித்திருந்தது. மேலும் வணிக ரீதியாகவும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

Also Read :வடிவேலு, சந்தானம் எடுத்த பிரேக்.. அதிர்ஷ்ட மழையில் நனையும் ஒரே காமெடி நடிகர்

பாரிஸ் ஜெயராஜ் : ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ். சந்தானம் நடிப்பில் இப்படி ஒரு படம் வந்ததே பல பேருக்கு தெரியாது. அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் இந்த படம் வரவேற்பை பெறவில்லை.

பிஸ்கோத் : கண்ணன் இயக்கத்தில் சந்தானம், ஆனந்த்ராஜ், சௌகார் ஜானகி மற்றும் பல நடிப்பில் வெளியான திரைப்படம் பிஸ்கோத். இந்தப் படம் ரசிகர்களை நோகடிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. மேலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இருப்பிடம் தோல்வியை தழுவியது.

Also Read :ஃப்ளாப் ஆனாலும், அலப்பறை தாங்கல.. மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள சந்தானம் போட்ட பிளான்

சபாபதி : ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சந்தானம், ப்ரீத்தி வர்மா ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் சபாபதி. இப்படம் விமர்சன ரீதியாக ஓரளவு நேர்மையான கருத்துக்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மோசமான தோல்வி அடைந்தது. இப்படம் சந்தானம் திரை வாழ்க்கையில் மிகப் பெரிய சருக்களை ஏற்படுத்தியது.

குலுகுலு : ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம், அதுல்யா சந்திரா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் குலுகுலு. இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். சந்தானத்தின் இந்த படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் தியேட்டரில் இருந்து தலைதெறிக்க ஓடும் அளவிற்கு கதைக்களம் அமைத்திருந்தது.

Also Read :சினிமா சூதாட்டத்தை புட்டுப்புட்டு வைத்த சந்தானம்.. ஒன்றரை வருடமாக அனுபவித்த வேதனை

Trending News