புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ரஜினி படத்தை தள்ளி வைத்த ரெட் ஜெயிண்ட்.. கமுக்கமாக காய் நகர்த்திய சுந்தர் சி

Red Giant and Rajini: இந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் எதிர்பார்த்த அளவை விட வசூலை வாரிக் குவித்தது. அதனால் அடுத்தடுத்து அவருடைய படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ரஜினி, மொகைதீன் பாய் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

அப்படிப்பட்ட இப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் ஆகப்போவதாக இருந்தது. ஆனால் தற்போது இதற்கு ஒரு தடங்களை ஏற்படுத்தியிருக்கிறது ரெட் ஜெயிண்ட். அதாவது ரெட் ஜெயிண்ட் நிறுவனம் கிட்டத்தட்ட மூன்று படங்களின் உரிமையை வாங்கி இருக்கிறது. அரண்மனை 4, அயலான் மற்றும் லால் சலாம். அப்படி இருக்கும் பொழுது இந்த படங்கள் அனைத்திற்கும் சமமான தியேட்டர்கள் கிடைப்பது அவ்வளவு எளிது கிடையாது.

அதனால் ஆரம்பத்தில் அரண்மனை 4 படத்தை கொஞ்சம் நாட்களுக்குப் பிறகு ரிலீஸ் பண்ணிக்கலாம் என்று தள்ளி வைக்கலாமா என்று சுந்தர் சி இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதுது. ஆனால் அவரோ அதெல்லாம் முடியாது கண்டிப்பாக பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணியே ஆக வேண்டும் என்று சில காரணங்களை சொல்லி லாக் செய்து விட்டார்.

Also read: 73 வயதில் ரஜினிக்கு வந்த ஹாலிவுட் வாய்ப்பு.. தலைவர் என்னைக்கும் நம்பர் ஒன் என்பது இதுல தெரியுது.!

அடுத்தபடியாக அயலான் படம் ஏற்கனவே பல வருடங்களாக இழுத்தடித்துக் கொண்டே இருந்ததால் மறுபடியும் தள்ளி வைக்க முடியாது என்பதால் முடிவு பண்ண மாதிரி அயலான் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள். இதனால் மீதமிருக்கும் லால் சலாம் படத்தை தள்ளி வைக்கலாம் என்று நினைத்திருக்கிறார்.

ஆனால் சரியான காரணத்தை சொன்னால் மட்டுமே எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார்கள் என்று முடிவு பண்ணி லால் சலாம் படத்தின் சில முக்கியமான காட்சிகள் டெலிட் ஆகிவிட்டது. அதனால் இப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ண முடியாது என்று பொய் சொல்லி ரஜினி படத்தை தள்ளி வைத்திருக்கிறார்கள்.

இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது லால் சலாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதும் ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்று பலரும் கலாய்க்கும் படி இருந்தது. அதனால் பொங்கல் அன்று ரிலீஸ் பண்ணினா எதிர்பார்த்த வசூல் கிடைக்குமா என்ற ஒரு சந்தேகம் இருப்பதினாலும் ரெட் ஜெயிண்ட் இந்த மாதிரி ஒரு தில்லாலங்கடி வேலையை பார்த்து இருக்கிறது. அதனால் பொங்கலுக்கு லால் சலாம் படம் வருவது சந்தேகம் தான்.

Also read: ரஜினியிடமே வாலாட்டிய லாரன்ஸ்.. மொத்த நம்பிக்கையும் இழந்ததால் வெறுத்துப்போன சூப்பர் ஸ்டார்

Trending News