புதன்கிழமை, ஜனவரி 8, 2025

மட்டமாக நடந்து கொண்ட ரெஜினா.. காசுக்காக கண்டதை செய்து அசிங்கப்பட்ட பொழப்பு

கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரெஜினா கசான்ட்ரா. இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் நடித்து வந்தார். அதிலும் குறிப்பாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இதைதொடர்ந்த தமிழில் சில படங்கள் நடித்தாலும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். மேலும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரெஜினா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இதனால் அவரை ஒரு மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பின் தொடர்கிறார்கள். இந்நிலையில் பல பெரிய நிறுவனங்களும் தங்களது விளம்பரங்களை இதுபோன்ற அதிக ரசிகர்கள் பின்தொடரும் நடிகைகள் நாடி அதில் நடிக்க வைக்கிறார்கள். இதற்காக பெரிய தொகையும் கொடுக்கப்படுகிறது.

ஒரு படத்திற்கு பல நாள் கால்ஷீட் கொடுத்து சம்பாதிக்கும் பணத்தை ஒன்று அல்லது இரண்டு விளம்பரத்திலேயே நடிகைகள் அந்தப் பணத்தை சம்பாதித்து விடுகிறார்கள். இதனால் படத்தை காட்டிலும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் மூலமாகவே பல நடிகைகள் கல்லா கட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ரெஜினா தனது சமூக வலைத்தள பக்கத்தில் மதுபான விளம்பரத்தில் நடித்துள்ளார். இதை பார்த்த பல ரசிகர்களும் காசு கொடுத்தால் கண்டபடி எல்லா விளம்பரத்திலும் நடிப்பீர்களா. கொஞ்சம் கூட சமூக அக்கறை இல்லை என விலாசி வருகிறார்கள்.

இதேபோல் காஜல் அகர்வால், ஹன்சிகா மோத்வானி, பூஜா ஹெக்டே போன்ற நடிகைகளும் மதுபான விளம்பரத்தில் நடித்திருந்தனர். இதுவும் அப்போது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. உங்களை பின்தொடர்பவர்களுக்கு நல்லது எதுவும் சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை, இது போன்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் விளம்பரங்களில் நடித்து ரசிகர்களுக்கு ஆசைகளை தூண்ட வேண்டாம் என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Regina Cassandra
Regina Cassandra

Trending News