வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஆர்வக்கோளாறால் பறிபோன வாய்ப்பு.. சொதப்பலில் முடிந்த ரேகா நாயர் போட்ட பிளான்

சின்னத்திரை நடிகையான ரேகா நாயர் பல விஷயங்களுக்கு ஆதரவாக தைரியமாக குரல் கொடுக்கக் கூடியவர். அந்த வகையில் இவர் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தாலும் துணிச்சல் பெண்ணாக இருப்பதால் இவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கின்றனர்.

இந்த காரணத்திற்காகவே இவருக்கு இரவின் நிழல் திரைப்படத்தில் ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தை பார்த்திபன் கொடுத்தார். அவரும் அந்த கதாபாத்திரத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு எந்தவித சங்கடமும் இல்லாமல் அந்த காட்சியில் நடித்திருந்தார்.

இதை சிலர் பாராட்டி இருந்தாலும், பயில்வான் ரங்கநாதன் போன்ற நபர்கள் வக்கிரமாக விமர்சித்தும் இருந்தனர். இதனால் கோபமான ரேகா நாயர் தற்போது பயில்வானுடன் நடுரோட்டில் சண்டை போட்டார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர வைரலானது.

இதனால் ரேகா நாயருக்கு சிலர் ஆதரவாக பேசி வந்தாலும் மற்றொரு புறம் நடுரோட்டில் இப்படியா அசிங்கமாக சண்டை போடுவது என்பது போன்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அவர் இப்படி மோசமாக நடந்து கொண்டது கூட அவர் போட்ட பிளான் தான் என்றும் கூறப்படுகிறது.

அதாவது இந்த படத்திற்குப் பிறகு பார்த்திபன் தான் இயக்கும் அடுத்தடுத்த படங்களில் கண்டிப்பாக ரேகா நாயருக்கு ஒரு வாய்ப்பு இருக்கும் என்று கூறியிருந்தார். ஆனால் அவர் நடந்து கொண்ட முறையினால் தற்போது அவருக்கு கிடைக்க இருந்த அத்தனை வாய்ப்புகளும் பறிபோய் உள்ளதாம்.

மேலும் இப்படி கொஞ்சம் கூட யோசிக்காமல் பேசும் இது போன்ற நடிகைகளால் பார்த்திபன் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறாராம். அதனால் இனி இது போன்ற நடிகைகளை தேர்வு செய்யக்கூடாது என்ற முடிவிலும் அவர் கவனமாக இருக்கிறாராம். அந்த வகையில் ஆர்வக்கோளாறினால் ரேகா நாயர் செய்த இந்த விஷயம் அவருக்கே ஆப்பாக முடிந்துள்ளது. தற்போது போட்ட பிளான் அனைத்தும் சொதப்பலில் முடிந்ததை நினைத்து அவர் அப்செட்டில் இருக்கிறாராம்.

Trending News