திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ரிலீஸ் தேதியை லாக் செய்த சந்திரமுகி 2 படக்குழு.. யார் கூட மோத போறாங்க தெரியுமா?

Chandramuki 2 Release Date: ரஜினி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை வாசு எடுத்து வந்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் லைக்கா தயாரிக்கும் இப்படத்தில் லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, லட்சுமி மேனன் மற்றும் எக்கச்சக்க பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

மேலும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்து உள்ளார். சமீபகாலமாக லாரன்ஸ் நடிப்பில் நிறைய படங்கள் வெளியானாலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் சந்திரமுகி 2 படத்தை பெரிதும் லாரன்ஸ் நம்பி இருக்கிறார்.

Also Read : சந்திரமுகி 2 படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படம்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

ஏனென்றால் முதல் பாகம் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்து வசூல் வேட்டையாடியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இரண்டாம் பாக படங்களில் நடிக்க விரும்பாத காரணத்தினால் லாரன்ஸ்க்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்த சூழலில் சந்திரமுகி 2 படப்பிடிப்பை படக்குழு முடித்துள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர். அதுமட்டும்இன்றி படப்பிடிப்பை நிறைவு செய்ததை ஒட்டி சந்திரமுகி 2 படக்குழு குரூப் போட்டோ எடுத்து உள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Also Read : சந்திரமுகி 2 முதல் ஜிகர்தண்டா 2 வரை மொத்தம் 13 படங்கள்..1000 கோடிக்கு மேல் பிசினஸில் முதலீடு செய்யும் நிறுவனம்

மேலும் செப்டம்பர் மாதம் நிறைய படங்கள் வெளியாக உள்ள நிலையில் சந்திரமுகி 2 படத்திற்கு போட்டியாக விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் படம் வெளியாக இருக்கிறது. இப்படம் நீண்ட வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட இருந்தது. 2014 ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் நிதி நெருக்கடியால் படம் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி இடம் பொருள் ஏவல் படம் வெளியாகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சந்திரமுகி 2 படத்திற்கு இப்படம் டஃப் கொடுக்குமா என்பது சந்தேகம்தான்.

chandramukhi-2
chandramukhi-2

Also Read : ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்திற்கு ஆப்பு.. நடிகையின் திமிர் பேச்சால் வந்த விளைவு

Trending News