Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபுதேவா – சிம்ரன்! ‘கமல் ஸ்ரீதேவி’ படத்தின் புதிய அப்டேட்சௌந்தர்யா ரஜினிகாந்

27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபுதேவா – சிம்ரன்! ‘கமல் ஸ்ரீதேவி’ படத்தின் புதிய அப்டேட்சௌந்தர்யா ரஜினிகாந்

தமிழ் சினிமாவில் நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகை சிம்ரன் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் ‘கமல் ஸ்ரீதேவி’.இப்படத்தின் புதிய அப்டேட்டை தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள படப்பிடிப்புத் தளத்தின் Behind The Scenes வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இப்படத்தை அறிமுக இயக்குநர் கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு எழுதி இயக்குகிறார்.பிரபுதேவா மற்றும் சிம்ரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.இதற்கு முன்பு இருவரும் 1997-ல் வெளியான ‘VIP’,1999-ல் வெளியான ‘டைம்’ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.குறிப்பாக,சுமார் 27ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும்,இப்படத்தில் ‘மண்டாடி’படத்தின் மூலம் கவனம் பெற்ற மிதுன் ஜெய் சங்கர் மற்றும் ஸ்மேகா மணிமேகலை ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஷரண் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்ய,ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.


சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஜியான் பிலிம்ஸ் மற்றும் மாகேஷ் ராஜ் பாசிலியனின் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.ஏற்கனவே சென்னை மற்றும் மூணாறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று,இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.


இந்நிலையில்,தற்போது வெளியாகியுள்ள BTS வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.இருப்பினும்,படத்தின் கதை குறித்த முழுமையான விவரங்களும்,அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.