வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரேவதி நடிப்பில் ஹிட்டான 6 படங்கள்.. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் மொத்த லிஸ்ட்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டவர் ரேவதி. அன்றைய காலகட்டத்தில் ரேவதிக்கு முன்னணி நடிகைகளின் வரிசையில் ரேவதிக்கும் ஒரு தனியிடத்தை ரசிகர்கள் கொடுத்து வைத்திருந்தனர். ரேவதி நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த படங்களைப் பற்றி பார்ப்போம்.

புதுமைப்பெண்: ரேவதி மற்றும் பாண்டியன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் புதுமைப்பெண். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு பெரிய அளவு வரவேற்பு இருந்தது மட்டுமின்றி ரேவதிக்கு என தனிப் பெயரும் பெற்றுக்கொடுத்தது. இப்படத்தில் இடம் பெற்ற “ஒரு தென்றல்”, “கஸ்தூரி மானே” ஆகிய பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.

வைதேகி காத்திருந்தாள்: விஜயகாந்த் மற்றும் ரேவதி நடிப்பில் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படம் வைதேகி காத்திருந்தாள். இப்படத்தில் விஜயகாந்த் மற்றும் ரேவதி நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. அதிலும் குறிப்பாக படத்தில் இடம்பெற்ற “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி” எனும் பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கேட்கப்பட்டு தான் வருகிறது.

ஆண்பாவம்: பாண்டியன், பாண்டியராஜன் மற்றும் ரேவதி ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ஆண்பாவம். இப்படத்திற்கு தற்போது வரை ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது, அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இப்படம் வெளிவந்த காலத்தில் பாண்டியராஜனுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதேபோல் ரேவதிக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.

உதயகீதம்: மோகன் மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான உதய கீதம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று ரேவதியின் திரை துறையில் முக்கிய இடத்தை பிடித்தது. அப்போதெல்லாம் மோகன் மற்றும் ரேவதியின் ஜோடிப் பொருத்தத்தை பெருவாரியான ரசிகர்கள் பார்த்து ரசித்து வந்தனர் அதனாலேயே அன்றைய இயக்குனர்கள் இவர்களை வைத்து படம் இயக்குவதற்கு முன்வந்துள்ளனர். இவர்களது கூட்டணியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

மௌன ராகம்: மோகன் மற்றும் ரேவதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் மௌன ராகம். இப்படத்தில் ரேவதி மற்றும் மோகனின் நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. ரேவதியின் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத திரைப்படம் என்றால் மௌனராகம் திரைப்படம் தான் அந்த அளவிற்கு இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அரங்கேற்ற வேளை: பிரபு மற்றும் ரேவதி நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் அரங்கேற்ற வேளை. இப்படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் அனைத்துமே ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றன. அதிலும் குறிப்பாக வி கே ராமசாமியுடன் ரேவதி செய்யும் சேட்டைகள் அனைத்தும் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்து விடும். அந்த அளவிற்கு அல்டிமேட் காமெடி காட்சிகளை அமைத்திருப்பார் படத்தின் இயக்குனர். ரேவதி வாழ்க்கையில் இப்படம் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News