1. Home
  2. விமர்சனங்கள்

DNA ஹிட் ஆச்சா? தோற்றுச்சா? அதர்வா ரசிகர்களின் ட்விட்டர் ரியாக்ஷன்!

DNA ஹிட் ஆச்சா? தோற்றுச்சா? அதர்வா ரசிகர்களின் ட்விட்டர் ரியாக்ஷன்!

DNA Twitter Review : நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிசா சஜயன், விஜி சந்திரசேகர், சேத்தன் மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கிறது டிஎன்ஏ படம். வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்திருக்கும் அதர்வாவுக்கு இப்படம் வெற்றியை கொடுத்துள்ளதா என்பதை ட்விட்டர் விமர்சனம் வாயிலாக பார்க்கலாம்.

DNA ஹிட் ஆச்சா? தோற்றுச்சா? அதர்வா ரசிகர்களின் ட்விட்டர் ரியாக்ஷன்!
dna

டிஎன்ஏ படம் அற்புதமான திரில்லர் படமாக அமைந்திருக்கிறது. படத்தில் ஒரு இடத்தில் கூட சலிப்பு ஏற்படும் மாதிரி காட்சிகள் அமையவில்லை. அதர்வா, நிமிஷா மற்றும் பாலாஜி சக்திவேல் தங்களது சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். பின்னணி இசை படத்திற்கு பக்க பலம் சேர்த்திருக்கிறது.

DNA ஹிட் ஆச்சா? தோற்றுச்சா? அதர்வா ரசிகர்களின் ட்விட்டர் ரியாக்ஷன்!
dna-review

கிளைமாக்ஸ் காட்சிகளில் கைத்தட்டல் நிச்சயம் என்று ரசிகர் ஒருவர் பதிவு போட்டிருக்கிறார். அதர்வா முரளி இதுவரை இல்லாத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து இருக்கிறார். இயக்குனர் ஒரு வலுவான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்.

DNA ஹிட் ஆச்சா? தோற்றுச்சா? அதர்வா ரசிகர்களின் ட்விட்டர் ரியாக்ஷன்!
dna-adharvaa

டிஎன்ஏ படம் ஒரு நல்ல எமோஷனல் கலந்த திரில்லர் படமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளும் அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஜிப்ரானின் இசை படத்திற்கு கூடுதல் சுவாரசியத்தை கொண்டு வந்திருக்கிறது.

DNA ஹிட் ஆச்சா? தோற்றுச்சா? அதர்வா ரசிகர்களின் ட்விட்டர் ரியாக்ஷன்!
dna-review

உணர்ச்சிபூர்வமான கவரக்கூடிய கதைகளைத்துடன் உருவாகி இருக்கிறது டிஎன்ஏ. படத்தின் வசனம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வில்லனின் பின்னணி கதை தனித்துவமாகவும், நன்றாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது.

DNA ஹிட் ஆச்சா? தோற்றுச்சா? அதர்வா ரசிகர்களின் ட்விட்டர் ரியாக்ஷன்!
dna-twitter-review

ஜிப்ரானின் இசை சிறப்பாக உள்ளது. டிஎன்ஏ படத்தின் முதல் இருபது நிமிடங்கள் மட்டுமே தாமதமாக செல்கிறது. அதன் பிறகு படம் வேகமாக ஓடுகிறது. எந்த காட்சியிலும் தொய்வு ஏற்படவில்லை. ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவரும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.