ஆடியோ லான்ச் ப்ரமோஷன் கை கொடுத்ததா.? தனுஷின் குபேரா ட்விட்டர் விமர்சனம்

Kuberaa Review: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இன்று குபேரா வெளியாகி உள்ளது. கடந்த சில வாரங்களாக இப்படத்தின் பிரமோஷன் தீயாக செய்யப்பட்டது.

அதேபோல் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் அனல் பறக்க ஆவேசமாக பேசினார். எல்லாமே சோசியல் மீடியாவில் வைரல் தான். இப்படி செய்த பிரமோஷன் கை கொடுத்ததா என ரசிகர்கள் விமர்சனம் மூலம் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதில் வழக்கம் போல தனுஷின் நடிப்பும் அவருடைய கதாபாத்திரமும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் போய் வா பாடல் தியேட்டரில் செம ஆட்டம் போட வைத்திருக்கிறது.

தனுஷின் குபேரா ட்விட்டர் விமர்சனம்

அதேபோல் தனுசுக்கு நிச்சயம் விருது உண்டு என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். மேலும் நாகர்ஜுனா சைலன்டாக ஸ்கோர் செய்துவிட்டார்.

எமோஷனல் கலந்த இரண்டாம் பாதி, கிளைமாக்ஸ் காட்சி என மொத்தத்தில் திரைக்கதை வேற லெவலில் இருப்பதாக பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இப்படியாக படத்தை ரசிகர்கள் பாராட்டி வரும் நிலையில் தமிழ்நாட்டை தாண்டி தெலுங்கிலும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இருப்பினும் வசூல் எப்படி இருக்கும் என்பது அடுத்தடுத்த காட்சிகளின் மூலம் தெரியவரும்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →