Godzilla X Kong பிரம்மாண்டமான ஓர் புதிய சாம்ராஜ்யம்.. எப்படி இருக்கு.? திரை விமர்சனம்

Godzilla X Kong : கடந்த 2021 ஆம் ஆண்டு காட்ஸில்லா வெஸ் காங் படத்தின் தொடர்ச்சியாக இப்போது வெளியாகி இருக்கிறது காட்ஸில்லா எக்ஸ் காங் – தி நியூ எம்பயர். ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் ரெபேக்கா ஹால், பிரையன் டைரி மற்றும் ஹென்றி ஆகியோர் நடிப்பில் இப்படம் உருவாகி இருக்கிறது.

காட்ஸில்லா மற்றும் கிங்காங் தனது வாழ்விடத்தில் இருந்து வெளி வருகின்றனர். அதாவது பூமியை அழிக்க வரும் டைட்டான் என்ற வில்லனை அளிப்பதற்காக இருவரும் ஒன்று சேர்ந்து போராடுகின்றனர்.

அதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்ததா என்பதுதான் கிளைமேக்ஸ். கிங்காங் காட்ஸில்லா என்பதால் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளது. படம் முழுக்க பிரம்மாண்டத்தை காட்டி இருக்கிறார் இயக்குனர்.

அட்ராசிட்டி பண்ணிய குட்டி காங்

ஆரம்பத்தில் இருந்தே படம் சற்று தொய்வுடன் சென்று கொண்டிருந்த நிலையில் இரண்டாம் பாதியில் குட்டி காங்கை இறக்கி இருக்கிறார் இயக்குனர். காங்குக்கும், குட்டி காங்குக்கும் நடக்கும் போட்டி அற்புதமாக இருந்தது.

மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குட்டி கிங்காங் கவர்ந்து இருக்கிறது. அதோடு காட்ஸில்லா உடன் காங் சண்டையிடும் காட்சியும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. படத்தில் சண்டைக் காட்சிகள் மற்றும் விஷ்வல் என்று இரண்டுமே நன்றாக வந்திருந்தது.

கண்டிப்பாக குழந்தைகளுக்கு சரியான எண்டர்டெயின்மென்ட் படமாக காட்ஸில்லா எக்ஸ் காங் படம் இருக்கும். ஆகையால் எதிர்பார்த்ததை விட ஹாலிவுட்டில் இப்படம் நல்ல வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழில் ஷங்கரை தாண்டிய பிரம்மாண்டத்தை ஹாலிவுட்டில் காட்ஸில்லா எக்ஸ் காங் இயக்குனர் காட்டியுள்ளார்.

சினிமாபேட்டை ரேட்டிங் : 3/5

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment