பாலிவுட்டை தூக்கி நிறுத்திய தமிழ் ரீமேக்.. விக்ரம் வேதா எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் ரித்திக் ரோஷன், சைப் அலிகான், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் விக்ரம் வேதா திரைப்படம் உருவாகி இருக்கிறது. தமிழில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணியில் வெளியாகி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகி இருக்கிறது.

vikram-vedha
vikram-vedha

தமிழைப் போலவே ஹிந்தியிலும் இந்த படத்தை விறுவிறுப்புடன் இயக்கியிருக்கும் புஷ்கர் காயத்ரி இந்த திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இந்த படம் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

vikram-vedha
vikram-vedha

தமிழ் விக்ரம் வேதா போன்று எந்த குறையும் இல்லாமல் சஸ்பென்ஸ் திரில்லருடன் இப்படம் இருப்பதாக ரசிகர்கள் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிலும் எதிர்பார்க்காத திருப்பங்களும், கதையின் வேகமும் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

vikram-vedha
vikram-vedha

அதற்கு ஏற்றார் போல் ரித்திக் ரோஷன் மற்றும் சைப் அலிகானின் பெர்பார்மன்ஸ் 100 சதவீதம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சமீப காலமாக பாலிவுட்டில் வெளியான எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதன் மூலம் பாலிவுட் திரையுலகம் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பல்வேறு கருத்துக்கள் வெளியானது.

vikram-vedha
vikram-vedh

தற்போது அதை எல்லாம் தகர்த்தெறியும் வகையில் இந்த விக்ரம் வேதாவிற்கு ரசிகர்களின் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. அந்த வகையில் தற்போது ட்விட்டர் தளத்தில் இந்த படத்தை பற்றி அவர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து வருகின்றனர்.

vikram-vedha
vikram-vedha

ஆக மொத்தம் இந்த விக்ரம் வேதா பாலிவுட்டில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெருமை தமிழ் இயக்குனர்களாகிய புஷ்கர் காயத்ரியை சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் இந்த திரைப்படம் தற்போது வெற்றியை நோக்கி முன்னேறி இருக்கிறது.