Iraivan Movie Review- சைக்கோ கில்லரை தண்டிக்க இறைவன் அவதாரம் எடுத்தாரா.? ‘A’ சர்டிபிகேட் வாங்கிய ஜெயம் ரவி பட திரை விமர்சனம்

Iraivan Movie Review: முதல்முறையாக ஜெயம் ரவியின் படம் ஏ சர்டிபிகேட் வாங்கியது என்றால் அது இறைவன் படம் தான். ஏனென்றால் படத்தில் மிகவும் கொடூரமான காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. அந்த அளவுக்கு இறைவன் படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம். அகமத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

அதாவது தமிழ் சினிமாவில் ராட்சசன், போர் தொழில் போன்ற நிறைய சீரியல் கில்லர் படங்களை பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் தான் இறைவன் படமும் இருக்கிறது. போலீஸ் அதிகாரியான ஜெயம் ரவி அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதாவது சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் இளம்பெண்கள் அடுத்தடுத்த மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.

ஆனாலும் இந்த கொலைகளில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அதாவது அந்த பெண்களின் கண்கள் பறித்து விடுகிறான் சைக்கோ கொலைகாரன். மேலும் இவரின் தேடுதல் வேட்டையில் ஜெயம் ரவியின் நண்பன் மற்றும் அவருடைய சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் அடுத்தடுத்து உயிரிழக்கிறார்கள்.

இதனால் தனக்கு போலீஸ் வேலையே வேண்டாம் என ஜெயம் ரவி விலகுகிறார். அதன் பிறகு தான் சைக்கோ கில்லரின் கோர ஆட்டம் மேலும் வலுவாகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஜெயம் ரவியை சுற்றி அடுத்தடுத்த பாதிப்புகள் சைக்கோ கொலைகாரனால் வருகிறது. ஆகையால் மீண்டும் ஜெயம் ரவி வேலையில் சேர்ந்தாரா, இறைவன் அவதாரம் எடுத்து சைக்கோ கில்லரை தண்டித்தாரா என்பது தான் இறைவன் படத்தின் கதை.

மேலும் படத்தின் பிளஸ் பாயிண்ட் கதாபாத்திரத்தின் தேர்வுகள் சரியாக அமைந்தது. அதோடு மட்டுமல்லாமல் இதுபோன்ற திரில்லர் படத்திலும் யுவன் சங்கர் ராஜாவின் இசை பக்கபலமாக அமைந்தது. படத்தின் இடைவெளி காட்சி ரசிகர்களை சீட்டு நுனிக்கு வர செய்திருந்தது. கிளைமாக்ஸ் காட்சி கணிக்க முடியாதபடி இயக்குனர் வைத்திருந்தார்.

மைனஸ் என்று சொல்ல வேண்டும் என்றால் இதுவரை சீரியல் கில்லர் சாயலில் தான் இறைவன் படமும் இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களை மிகுந்த அச்சத்தில் ஏற்படுத்தும் படியான காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. அவ்வளவு தத்ரூபமாக காட்டி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் நயன்தாராவை பெரிய அளவில் இயக்குனர் படத்தில் பயன்படுத்தவில்லை. மன வலிமை உடையவர்கள் கண்டிப்பாக இறைவன் படத்தை பார்க்கலாம்.

சினிமாபேட்டை ரேட்டிங் : 2.0/5