Kingdom Twitter Review : கௌதம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கிறது கிங்டம் படம். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை ட்விட்டர் வாயிலாக பதிவிட்டு வருகிறார்கள்.
கிங்டம் படத்தின் அறிமுகம் காட்சி தொடங்கி எல்லாமே நன்றாக எழுதி இருக்கிறார்கள். சில இடங்களில் தொய்வு இருந்தாலும் பெரும்பாலும் இருக்கக்கூடியதாக இருக்கிறது. தொழில்நுட்பம் வாயிலாகவும் சிறந்ததை கொடுத்துள்ளனர். இரண்டாம் பாதியில் நன்றாக அமைந்திருக்கிறது.

விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது. எப்போதும் போல அனிருத்தின் இசையும் அற்புதம். தொழில்நுட்ப ரீதியாக பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக ஜோமோன் மற்றும் கிரிஷியின் ஒளிப்பதிவு அட்டகாசம்.

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் ட்விட்டர் விமர்சனம்
இரண்டாம் பாதியில் அதிக தருணங்கள் இல்லை. இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தும்படி சில காட்சிகளை பயன்படுத்தி இருக்கலாம். மொத்தத்தில் கௌதமின் இந்த அதிரடியான திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.

ராஜ்யத்தை சுற்றியுள்ள உலகம் நன்றாக அமைக்கப்பட்டுள்ளது. விஜய் தேவர கொண்டா முழுவதுமாக அதிரடி ஆக்சன் காட்சிகளை கொடுத்திருக்கிறார். இடைவெளியில் அனிருத்தின் இசை உச்சத்தை தொடுகிறது.

ஒரு சில இடங்களில் மங்கலாக உணர்ந்தேன். ஒவ்வொரு ஃபிரேமிலும் பிரம்மாண்டம் தெரிகிறது. கண்டிப்பாக கிங்டம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும்.