Madras Matinee Movie Review: கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி என பலர் நடிப்பில் மெட்ராஸ் மேட்னி வெளியாகி உள்ளது. மிடில் கிளாஸ் குடும்ப தலைவன் பற்றிய இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்பதை விமர்சனத்தின் மூலம் காண்போம்.
எழுத்தாளராக இருக்கும் சத்யராஜ் சாமானிய மனிதன் பற்றிய கதையை எழுதும் சவாலை ஏற்றுக் கொள்கிறார். அதன்படி காளி வெங்கட்டை சந்திக்கும் அவரின் பார்வையில் படம் தொடங்குகிறது.
நடுத்தர வர்க்க குடும்ப தலைவனான காளி வெங்கட் தன் மகள், மகன் இருவரையும் நல்ல நிலைக்கு கொண்டு வர பாடுபடுகிறார். அதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள், எதிர்கொள்ளும் கஷ்டங்கள் ஆகியவைதான் படத்தின் கதை.
முழு விமர்சனம்
இதில் கதையின் நாயகனாக காளி வெங்கட் மொத்த படத்தையும் தாங்கி இருக்கிறார். ஒரு எழுத்தாளராக சத்யராஜ் பேசுவது போன்று படம் நகர்கிறது. ஆனால் ஆவணப்படம் போல் இருப்பது மைனஸ் ஆக இருக்கிறது.
இருப்பினும் ரோஷினி உட்பட மற்ற கதாபாத்திரங்கள் தங்களுக்கான வேலையை சிறப்பாக செய்துள்ளனர். ஏற்கனவே குடும்பஸ்தன் படத்தில் எதார்த்த கதைகளத்தை பார்த்தோம்.
அதை பிரதிபலிப்பது போல் இப்படத்திலும் காட்சிகள் இருக்கிறது. எமோஷனல் சென்டிமென்ட் காமெடி என கலவையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஆனாலும் திரைக்கதை ரசிகர்களின் உணர்வோடு முழுதாக ஒன்றவில்லை.
இருந்தாலும் வன்முறை படங்களை விரும்பாமல் குடும்ப சித்திரங்களை பார்ப்பவர்கள் தாராளமாக இப்படத்தை காணலாம்.
சினிமா பேட்டை ரேட்டிங் : 2.5/5